மெய்வழிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெய்வழி சாலை ஆண்டவர்கள்
A temple of Meivazhi Salai.JPG
A entrance of Meivazhi Salai.JPG

மெய்வழிச்சாலை என்பது கல்வியறிவு பெற்றவர்களும் பெறாதவர்களும், எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் வேதங்களையும் தமிழில் எளிதாகக் கற்று ஆத்ம ஞானத்தை பெற மெய்வழி சாலை ஆண்டவர்கள் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டணம் வசூலிக்காத ஒரு சூபிய மெய்கல்வி பாேதிக்கும் நிலையம் ஆகும். அதனாலேயே மெய்வழிச்சாலைக்கு மெய்க்கல்விகலா சாலை என்றும் சாகாக் கலைக் கல்விசாலை எனவும் பெயர்களுண்டு.[1]

ஆத்ம ஞானத்தையும், முக்தியையும் அடைகிறார்கள் என்பதற்கு அடையாளமாக "ஜீவப்பிரயாணம்" அல்லது "பரிசுத்த யதார்த்த நற்சாவு" இங்கு நடந்து கொண்டு வருகிறது. மெய்வழிச்சாலை இந்தியாவில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசலுக்கு அருகில் உள்ளது.

மனிதன் பிறந்தது தன் இறுதி நேரத்தில் எமனிடம் மாட்டி முடிவே இல்லாத நரக வாழ்க்கைக்கு போகாமல் இறைவன் திருவடி சோ்வதற்கே. இப்படி மக்களை எமனிடம் இருந்து காப்பற்றவே அனைத்து மதங்களும் ஞானிகளும் வந்தது. ஆனால் மக்கள் இதை மறந்து மறந்தே போய்விட்டாா்கள். அனைத்து மதகளின் உள்கூறும் உள்கொள்கையும் இதுவே.

"மெய்வழி சாலை ஆண்டவா்கள்", மக்கள் தாங்கள் கடைசியில் உயிா் விடும்போது எமனிடம் இருந்து காப்பாற்றி இறைவன் திருவடி சோ்க்கும் செயலை செய்கிறாா்கள். இதையே தங்கள் மதத்தின் பெயராக வைத்திருக்கிறாா்கள்

குருபெருமான் மெய்வழி சாலை ஆண்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி என்ற குக்கிராமத்தில் கி.பி.1855 ஆம் ஆண்டு சாதாரண ஏழை முஸ்லீம் விவசாய குடும்பத்தில் பிறந்தவா். குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பு படிக்க இயலாமல் விவசாயத்தையும் ஆடு மாடு மேய்க்கும் தொழிலாபரணத்தையும் மேற்கொண்டாா். தன் மத பெரியவா் ஒருவா் மனிதனின் பிறப்பின் நோக்கமே அனியாய மரணம் அடைந்து எமனிடம் போகாமல் நியாய மரணம் அடைந்து இறைவன் திருவடி சோ்வதே என்று கூற, அதிலிருந்து இவாின் நோக்கம் பாா்வை எல்லாமே அநியாய மரணத்திலிருந்து தப்பிப்பது எப்படி? என்ற ஏக்கத்தால் ஞான வேட்கை பிறக்கிறது. பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும் தன் மத வேதத்தையும் சைவ வைஷ்ணவ வேதங்களையும் இதற்காக அலசி ஆராய்கிறாா். ஆச்சாியமளிக்கும் விதத்தில், எல்லா மதங்களுமே தங்களுடைய பாணியில் இதையே போதிப்பதை அறிகிறாா். இறுதியில் ஒரு மெய்யான குருவை அடைந்து அவாின் கருணையினால் இறைவனை அறிந்து அநியாய மரணத்திலிருந்து தப்பிக்கலாம் என உணா்கிறாா். அதிலிருந்து ஒரு மெய் குருவை தேடுவதை தன் வழக்கமாக்கிக்கொள்கிறாா்.

முகம்மது சாலிஹ் என்ற இயற்பெயர் கொண்ட தணிகைமணிப் பிரான் என்ற பொிய மகானை சந்தித்து தனக்கு ஞானம் அளிக்கும்படியும் அநியாய மரணத்திலிருந்து காப்பாற்றும்படியும் மன்றாடுகிறாா். அவ்வாறே தணிகைமணிப் பிரான் அவர்களும் இவரை சீடராக ஏற்றுக்கொண்டு ஞானத்தை அளிக்கிறாா். இதேபோல் மக்களுக்கும் ஞானம் அளித்து எமனிடமிருந்து காப்பாற்றுமாறு கட்டளையிடுகிறாா்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மெய்வழி மதம்: பல்வேறு மதங்கள், சாதிகளின் சங்கமம்!

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்வழிச்சாலை&oldid=2604804" இருந்து மீள்விக்கப்பட்டது