உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்யழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்யழகன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சி. பிரேம் குமார்
தயாரிப்புஜோதிகா
சூர்யா
கதைசி. பிரேம் குமார்
இசைகோவிந்த் வசந்தா
நடிப்பு
ஒளிப்பதிவுமகேந்திரன் ஜெயராஜூ
படத்தொகுப்புஆர். கோவிந்தராஜ்
கலையகம்2டி எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்சக்தி பிலிம் பேக்டரி
வெளியீடு27 செப்டம்பர் 2024 (2024-09-27)
ஓட்டம்178 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய் 45.50 கோடி[2]

மெய்யழகன் (Meiyazhagan) 2024 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நாடகம்[1] தொடர்பான இத்திரைப்படத்தை சி. பிரேம் குமார் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் தயாரித்தனர். இப்படத்தில் கார்த்திக் சிவகுமார், அரவிந்த்சாமி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இவர்களுடன் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்சினி, ஜெயப்பிரகாசு, சிறீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண் சக்தி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

நடிகர்கள்

[தொகு]

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "... கோயில், மண்டபம், சிதிலமடைந்த கோட்டை எனப் பழைமை மாறாத தஞ்சை மண்ணைத் திரையெங்கும் நிரப்பியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு. நாஸ்டால்ஜியா நினைவுகளுடன் உறவுகளின் அவசியத்தைக் கவிதையாக வார்த்திருக்கும் இந்த ‘மெய்யழகன்' மெய்யான அழகனே!" என்று எழுதி 44/100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. படம் முடியும்வரை அவர் பெயர் குறிப்பிடவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Meiyazhagan". British Board of Film Classification. Archived from the original on 8 November 2024. Retrieved 27 September 2024.
  2. Jogani, Rishil (18 October 2024). "Lubber Pandhu and Meiyazhagan Box Office Update: Tamil feel-good dramas eye mid-40 crore worldwide lifetime". Pinkvilla (in ஆங்கிலம்). Archived from the original on 17 January 2025. Retrieved 16 January 2025.
  3. விமர்சனக்குழு, விகடன் (2024-10-02). "மெய்யழகன் - சினிமா விமர்சனம்". விகடன். Retrieved 2025-06-17.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யழகன்&oldid=4496523" இலிருந்து மீள்விக்கப்பட்டது