உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்ப்பொருளியம் (தகவல் அறிவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினியியலும் தகவல் அறிவியலும் மெய்ப்பொருளியம் (Ontology) ஒரு குறிப்பிட்ட ஆய்வுப் பொருள் அரங்கத்தின் (particular problem domain's) உருமாதிரியாக்க மூலங்களை (representational primitives) வரையறை செய்கின்றது.[1] பொதுவாக இந்த உருமாதிரியாக்க மூலங்கள் வகுப்புகள் (classes/types/sets), பண்புகள் (properties/attributes) மற்றும் உறவுகள் (relationships) ஆகும். உருமாதிரியாக்க மூலங்களின் வரையறைகள், அவற்றின் பெயர்களை, பொருளை, அவற்றுக்குரிய கட்டுப்பாடுகளை, அவை எப்படி ஏரண முறையில் பயன்படுத்தப்படும் என்பதை வரையறை செய்யும்.

செயற்கை அறிவுத்திறன், பொருளுணர் வலை, தொகுப்புப் பொறியியல், நூலகவியல், நல தகவலியல் உட்பட்ட துறைகள் மெய்பொருளியங்களை உருவாக்கி, அத் துறைகளில் சிக்கல் தீர்வுக்குப் பயன்படுத்துகின்றன.

கூறுகள்[தொகு]

பல மெய்பொருளியங்களின் கட்டமைப்புக்கள் ஒத்த கூறுகளைக் கொண்டுள்ளன. பின்வரும் கூறுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 • தனியன்கள் - Individuals
 • வகுப்புகள் - Classes/Types/Sets
 • பண்புகள் - Properties/Attributes
 • உறவுகள் - Relations
 • செயற்கூற்று குறிச்சொற்கள் - Functional terms
 • கட்டுப்பாடுகள் - Restrictions
 • விதிகள் - Rules
 • அடிக்கோள்கள் - Axioms
 • நிகழ்வுகள் - Events

துறைகள் வாரியாக மெய்ப்பொருளியங்கள்[தொகு]

 • உயிரியல் - Open Biomedical Ontologies - OBO Foundry
 • வேளாண்மையியல் - AGROVOC
 • பண்பாட்டு மரபுரிமை -CIDOC Conceptual Reference Model

மேற்கோள்கள்[தொகு]

 1. Ling Liu and M. Tamer Özsu (Eds.) (2008). "Ontology". The Encyclopedia of Database System. Springer-Verlag. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)