மெய்நிகர் யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெய்நிகர் யாழ்ப்பாணம்
Jaffna360logo.jpg
Jaffna360.jpg
மெய்நிகர் யாழ்ப்பாணம்
உரலிwww.jaffna360.com
தளத்தின் வகைஅகலப் பரப்புக் காட்சி
பதிவு செய்தல்இல்லை
கிடைக்கும் மொழி(கள்)தமிழ், ஆங்கிலம்
வெளியீடுபெப்ரவரி 25, 2012 (2012-02-25)
அலெக்சா நிலை1310231
தற்போதைய நிலைஇயங்குநிலை


மெய்நிகர் யாழ்ப்பாணம் (Jaffna 360) என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.[1] இது யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண நகரம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள், பாடசாலைகள், வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள், தேவாலயங்கள், இயற்கைக் காட்சிகள், பல்கலைக்கழகங்கள், கட்டடக் கலை, திருவிழாக்கள், இடங்கள் முதலியவற்றின் அகலப் பரப்புக் காட்சிகளை வழங்குகின்றது.[2]

வசதிகள்[தொகு]

அகலப் பரப்புக் காட்சிகளைத் தேசப்படத்திலிருந்து தெரிவு செய்யக்கூடிய வசதியை இத்தளம் வழங்குகின்றது. இதற்காக இத்தளம் கூகுள் நிலப்படங்களைப் பயன்படுத்துகின்றது. வரைபடம், செயற்கைக்கோள் என்னும் இரு தெரிவுகளினூடாகத் தேசப்படத்தின் வகையையும் மாற்ற முடிகின்றது.[3]

மேலும் விரைவில் வெளிவரவுள்ள அகலப் பரப்புக் காட்சிகளின் விபரங்களும் இத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.[4] இணையத்தளத்திலேயே மெய்நிகர் படப்பிடிப்பிற்கான படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் ஓரிடத்தைப் படம்பிடிக்குமாறு வேண்டுகோளும் விடுக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]