மெய்நிகர் திரையரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்நிகர் திரையரங்கு
உருவாக்குனர்Revolution Software
தளம்Amiga, Atari ST, PC (MS-DOS,Windows), PlayStation, Macintosh, Linux
மென்பொருள் வகைமைGame engine
உரிமம்Proprietary
இணையத்தளம்http://revolution.co.uk/

மெய்நிகர் திரையரங்கு (Virtual Theatre) என்பது ஒரு கணணி விளையாட்டு இயந்திரம். இவ்வியந்திரம் Revolution Sofware என்ற நிறுவனத்தால் கணணி இயங்குதளத்தில் சாகச விளையாட்டுகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும். இங்கே குழுக்கள் தங்கள் நிகழ்வுகளை ஸ்கிரிப்ட் செய்யவும் உயிரூட்டிய கதாபாத்திரங்களை பின்னணிச்சூழல் சார்பாக அசையவைக்கவும் ஒரு புள்ளி மற்றும் கிளிக் பாணி இடைமுகத்தை பயன்படுத்தலாம். அதன் முதல் வெளியீட்டின்போது, LucasArts' SCUMM மற்றும் Sierra's Creative Interpreter, போன்ற போட்டியிடும் இயந்திரங்களை வெளியிட்டன, இதற்கு காரணம் அவர்களது அன்றைய உயர் மட்ட செயற்கை நுண்ணறிவு ஆகும். இந்த இயந்திரம் முதல் 1989 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது, இதை பாவித்து உருவான முதல் கணணி விளையாட்டு Lure of the Temptress 1992ஆம் ஆண்டு வெளிவந்தது. அதை தொடர்ந்து Beneath a Steel Sky (1994), Broken Sword: The Shadow of the Templars (1996) மற்றும் Broken Sword II: The Smoking Mirror (1997) உருவாகின.

இவ்வியந்திரம் விளையாட்டு கதாநாயகனை சுதந்திரமாக விளையாட்டு உலகை சுற்றிபார்க்க அனுமதித்தது, இது முன்னர் சாத்தியம் இல்லை. அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் பொருட்கள் இடத்தை ஆக்கிரமித்தது, அதன் விளைவாக வீரர் அல்லாத கதாபாத்திரங்கள் அறியாமல் கதாநாயகனின் பாதையை தடுக்க முடியாது. இது முந்தைய விளையாட்டு இயந்திரங்கள் விட மிகவும் யதார்த்தமான விளையாட்டு உலகம் ஒன்றை உருவாக்கியது. முன்னையதாக கதாநாயகன் அல்லாத கதாபாத்திரங்கள் மிகவும் எளிமையான பணிகளை செய்தன, அவை அறியாமல் கதாநாயகனின் பாதையை தடை செய்யும்.

மெய்நிகர் திரையரங்கு (Virtual Theatre) இயந்திரத்தை பாவிக்கும் விளையாட்டுகள் இப்பொழுது ScummVMயை உபயோகித்து நவீன வன்பொருட்களில் பாவனை செய்யலாம். இதன் காரணமாக இவ்வியந்திரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத தளங்களிலும் இயங்கும். 2012ஆம் ஆண்டில் இவ்வியந்திரமனது Broken Sword: The Serpent's Curse (2013)காக "Virtual Theatre 7" ஆக புதுப்பிக்கப்படவுள்ளது.

அபிவிருத்தி[தொகு]

சார்லஸ் செசில் மற்றும் டோனி வார்ரிநேர் ஆகிய இருவரும் Artic Computing என்ற ஆங்கில வீடியோ விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றினர். 1990ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் டேவிட் ச்ய்கேஸ் மற்றும் நொரின் கார்மொடியுடன் இணைந்து தங்கள் வீடியோ விளையாட்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர். அவர்களது முதல் கணணி விளையாட்டாக Lure of the Temptressயை 1992ஆம் ஆண்டு அமிகா, அடாரி எஸ்டி மற்றும் கணனிக்கும் செய்தனர்.

1994ஆம் ஆண்டு 'Beneath a Steel Sky' அமிகா மற்றும் கணனிக்கு வெளியிடப்பட்டது. இதற்காக மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் திரையரங்கை வார்ரிநேர் மற்றும் ச்ய்கேஸ் பயன்படுத்தினார்கள். எனினும் இது Lure of the Temptressயை விட ஆறு மடங்கு பெரிதாக அளவில் இருந்தது. Broken Sword: The Shadow of the Templars 1996ஆம் ஆண்டு கணணி, மேக் மற்றும் பிளே ஸ்டேஷன்இற்காக வெளிவந்தது. இதனையடுத்து 'Broken Sword II: The Smoking Mirror' 1997ஆம் ஆண்டு கணனிக்கும் பிளேஸ்டேஷனிற்கும் வெளிவந்தது.

அம்சங்கள்[தொகு]

பாரம்பரியமாக இவ்வாரான கணணி விளையாட்டுகளில் கதாநாயகனல்லாத கதாபாத்திரங்கள் நிலையாக இருந்தன. எனினும் Virtual Theatre இக்கதாபாத்திரங்களை அக்கற்பனை உலகில் விரும்பியவாறு நடமாடவிட்டது.

இதனது இன்னுமோர் அனுகூலமானது இது எந்த ஒரு தளத்திலும் தங்கியிருக்காது. இது அமெரிக்க மென்பொருள் கட்டுமானர்கள் பாவித்த Cயை Amigaவில் வேகமாக செயலாற்றியது. இது Sierra titlesயை விட அதிநவீன யுக்திகளை பாவனை செய்து 'King's Quest VI'யை Amigaவுக்கு மாற்றியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்நிகர்_திரையரங்கு&oldid=2157747" இலிருந்து மீள்விக்கப்பட்டது