மெய்நிகர் கற்றல் வகுப்பறை செயல்திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்றல் கற்பித்தலை கணினி, வெண்பலகைகள், படம் காட்டும் கருவிகள், சிறப்பு மென்பொருட்கள், காணொளி கருத்தரங்குக்கள் போன்றவைகளைக் கொண்டு ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை நல்கி தொழில் நுட்ப வகுப்பறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்ட ஒரு செயல்திட்டமே சூட்டிகை மெய்நிகர் கற்றல் வகுப்பறை ஆகும்.

மெய்நிகர் கற்றல் வகுப்பறையானது (Smart Virtual Classroom) தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு நிறுவப்பட்ட படபிடிப்புக் கூடத்திலிருந்து (studio) ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளானது அந்த படப்பிடிப்புக் கூடத்தோடு இணையதளம் மூலம் இணைக்கப்பட்ட பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பபடுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் நிகழ்ச்சியில் காணொளிக் கலந்துரையாடலில் உள் நுழைந்து (logged) ஊடாடும் வெண்பலகை(Interactive White Board), பட வீழ்த்தி , கணினி ஆகியவைகள் உதவியோடு மெய்நிகர் வகுப்பறைச் சூழலில் கற்றுக்கொள்கிறார்கள்.

மெய்நிகர் கற்றல் வகுப்பறையின் நன்மைகள்[தொகு]

மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறது.

மின் வழிக்கற்றல் (e learning) மூலமாக கல்வி சம்மந்தமான காணொளிகளை பார்ப்பது,

மைய சேவையகத்தில் சேமித்து வைத்திருக்கும் காணொளிகளை தரவிறக்கிப் பார்ப்பது (Download),

காணொளிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பிற பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவது,

பதிவு செய்து வைக்கப் பட்டிருக்கும் காணொளிகளையும் (Recorded videos) ,

ஒலிப்பதிவுகளையும் (audios) பயன்படுத்துவது

மெய்நிகர் வகுப்பறை மூலம் நேரலை வகுப்பு ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் நடைபெறுவதால் ஆசிரியர் பற்றாக்குறையினையும் சரிசெய்யலாம். [1]

மேற்கோள்கள்[தொகு]