மெய்நிகர் ஆய்வகங்கள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்நிகர் ஆய்வகங்கள்

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பித்தலை மேம்படுத்த அரசாங்கங்கள் பலவகைகளில் முயன்று வருகிறது. இத்தகைய மேம்பாட்டு முறைகளில் ஒன்றாக, இந்திய அரசின் மனித வள அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் திட்டம் மெய்நிகர் ஆய்வகங்கள் (virtual labs) ஆகும்.[1]

உருவாக்கம்[தொகு]

மெய்நிகர் ஆய்வகங்கள் என்பது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சினால் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் கல்விக்கான தேசிய திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட திட்டமாகும்.[2] இளநிலை முதல் ஆராய்ச்சி வரை அனைத்து நிலைகளிலும் உள்ள அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஆய்வகங்களுக்குத் தொலைநிலை அணுகலை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.[3]

கூடுதல் வலை வளங்கள், காணொலி விரிவுரைகள், இயங்கு படங்கள் மற்றும் சுய மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு கற்றலின் நுணுக்கங்களை மாணவர்கள் பெறக்கூடிய ஏஜிபிஎல் 3.0 உரிமத்தின் கீழ் வழங்கும் முழுமையான கற்றல் மேலாண்மை முறையாகும் இது. விலையுயர்ந்த உபகரணங்கள் மற்றும் வளங்கள் பகிரப்படும் சாத்யக் கூறுகள் உள்ளது. இவை நேரம் மற்றும் புவியியல் தூரங்களில் உள்ள தடைகள் காரணமாகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தன.

பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்-ஐதராபாத்து, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (தில்லி, மும்பை, கான்பூர், கரக்பூர், சென்னை, ரூர்க்கி, குவகாத்தி மற்றும் ஐதராபாது), அமிர்தா விஸ்வ வித்யாபீடம், தயால்பாக் பல்கலைக்கழகம், தேசிய தொழில்நுட்பக் கழகம்-கர்நாடகம், மற்றும் புனே பொறியியல் கல்லூரி, புனே திட்டத்தில் பங்கேற்றதற்கு முன்னணி நிறுவனங்களாகும்.

இந்த திட்டம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்பொறியியல், இயந்திரப் பொறியியல், வேதிப் பொறியியல், உயிரித்தொழில்நுட்பவியல் மற்றும் உயிர்மருத்துவப் பொறியியல், குடிமைப் பொறியியல், இயற்பியல் மற்றும் வேதிப் பொறியியல் ஆகியவற்றின் பரந்த பகுதிகளை உள்ளடக்கியது.

மேலும் காண்க[தொகு]

ஆராய்ச்சி வெளியீடு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.hindutamil.in/news/supplements//36980-.html
  2. "Mission Document of National Mission on Education Through ICT" (PDF). Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 March 2011.
  3. Callaghan, Harkin, Maguire (2007). "Paradigms in Remote Experimentation", International Journal of Online Engineering (iJOE), Vol 3, No 4 (2007)

 

வெளி இணைப்புகள்[தொகு]