மெய்டன்ஸ் ஹோட்டல், தில்லி
மெய்டன்ஸ் ஹோட்டல் டெல்லியிலுள்ள பாரம்பரியமிக்க ஹோட்டல்களுள் ஒன்று. இந்த ஹோட்டல் 1903 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அன்றைய நேரத்தில் திறக்கப்பட்ட நவீன ஹோட்டல் இதுவாகும். மேலும் இது டெல்லியிலுள்ள சிவில் வரிசையில் உள்ள ஐரோப்பிய கட்டிடங்களுடன் ஒன்றாக உள்ளது.[1]
வரலாறு[தொகு]
நகர்ப்புற ஹோட்டலை இரு ஆங்கிலேய சகோதரர்கள் 1894 முதல் இணைந்து நடத்தினர். இவர்கள் மெய்டன் சகோதரர்கள் ஆவர். 1902 முதல், இவர்களில் ஒருவரான ஜே.மெய்டன் டெல்லியிலுள்ள இந்த ஹோட்டலை நடத்தினார். இருபதாம் நூற்றாண்டில் இது டெல்லியிலே சிறந்த ஹோட்டலாகக் கருதப்பட்டது. 1903 ஆம் ஆண்டு கட்சன் பிரபுவால் நடத்தப்பட்ட ஏழாம் எட்வர்ட் இந்தியப் பேரரசர் பதவியேற்கும் முடிசூட்டு விழா இங்குதான் நடைபெற்றது. நகர்ப்புற ஹோட்டல் இத்தகைய சிறந்த இடத்தினை பிடிக்க மிக அதிகமான முயற்சி எடுக்கப்பட்டது. மேலும் அதிக செலவுகளும் செய்யப்பட்டன. தற்போது இந்த ஹோட்டல் ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்சின் ஒரு பகுதியாக உள்ளது. [2]
சிறப்புகள்[தொகு]
எட்டு ஏக்கரைக் கொண்ட மெய்டன்ஸ் ஹோட்டல், பசுமையான தோட்டங்களையும் சிறப்பம்சங்களையும் கொண்ட அழகான அறைகளுடன் காட்சியளிக்கிறது. 24 மணி நேர அறை சேவை, ஹோட்டல் விருந்து மண்டபம், குளிரூட்டும் சாதனம், கம்பி இல்லாத இணைய சேவை உட்பட பலதரப்பட்ட சேவைகளை இந்த ஹோட்டல் வழங்குகிறது. பிரிட்டிஷ் தலைவரான கர்சன் அறையைப் போன்ற விருந்தினர் மண்டபம் உள்ளது. ஆவணக் காப்பகத்தில் எழுபதிற்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் உள்ளன.
இந்த அரிய புகைப்படங்கள் 1900 ஆம் ஆண்டு பயணம் செய்த ராஜ் அவர்களை நினைவுகூறும் வகையில் உள்ளது. கர்சன் அறையில் ஐரோப்பிய மற்றும் இந்திய சமையல் வகைகள் உண்பதற்காக உள்ளன. தோட்டத்துடன் கூடிய மேல்தளமும் ஹோட்டலின் காஃபி கடையும் ஹோட்டல் முற்றத்தின் அழகினை மேலும் அதிகரிக்கின்றன. அமைதியாக உலாவுவதற்கும், புத்தகங்களை படிப்பதற்கும் போன்றவற்றிற்கு உகந்த சூழ்நிலைகளும் இங்கே உள்ளன. இந்த ஹோட்டலிற்குச் சொந்தமான கேவல்ரி பார் ஒன்றும் இங்குள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டு முதலே நடத்தப்பட்டு வருகிறது. இந்த பார் சிறியதாக இருந்தாலும் காக்டெய்ல் மற்றும் விருப்பமான பானங்களைக் குடிப்பதற்கான இனிமையான சுற்றுச்சூழலை கொண்டுள்ளது. [3]
அறைகள்[தொகு]
சிறப்பாக அமைக்கப்பட்ட இணைய வசதி, குளிரூட்டும் சாதனம், வெப்பநிலை கட்டுப்படுத்துதல், தட்டையான திரை கொண்ட தொலைக்காட்சி மற்றும் நேரடித் தொலைபேசி வசதி போன்றவை மெய்டன்ஸ் ஹோட்டலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் ஆகும். இத்தகைய வசதிகளுடன் கூடிய நான்கு மாடிகளும், 55 அறைகளும் இந்த ஹோட்டலில் உள்ளன. [4]
- அடிப்படை வசதிகள்
- குளிரூட்டும் சாதனம்
- உணவகம்
- பார்
- அறைச் சேவை
- வயரில்லா இணையச் சேவை
- இணையவசதி
- காஃபி கடை
- நீச்சல் குளம்
இருப்பிடம்[தொகு]
ரிவர் யமுனா வங்கியின் அருகில் இந்த ஹோட்டல் இடம்பெற்றுள்ளது. இதன் முகவரி: 7 ஷாம் நாத் மார்க், ரிவர் யமுனா வங்கி அருகில், வட டெல்லி. இது ஷாம் நாத் மார்க் குடியிருப்புப் பகுதியில் உள்ளது. சிவில் லைன்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து மிக அண்மையில் உள்ளது. விருந்தினர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பல இடங்களை இங்கிருந்து நிதானமாக சென்று பார்க்க இயலும். இந்த ஹோட்டலுக்கு மிக அருகிலுள்ள இடங்கள்:
- ஹோட்டலில் இருந்து ஆஜ்மீரி கேட் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
- ஹோட்டலில் இருந்து கமலா நேரு ரிட்ஜ் காடு – சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
- ஹோட்டலில் இருந்து கன்னாட் இடம் – சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த ஹோட்டலுக்கு அருகிலேயே ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளது. டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் ஹோட்டலில் இருந்து தோராயமாக 21 கிலோ மீட்டர் உள்ளது. அதுமட்டுமின்றி ஹோட்டலில் இருந்து புது டெல்லி ரயில் நிலையம் தோராயமாக ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சூப்பீரியர் அறை வசதிகள்[தொகு]
- குளுரூட்டும் வசதி
- மினி பார்
- பாதுகாப்பு
- தொலைபேசி
- இணைய வசதி
- தனிப்பட்ட குளியலறை
- வண்ணத் தொலைக்காட்சி
டீலக்ஸ் அறை வசதிகள்[தொகு]
- குளுரூட்டும் வசதி
- மினி பார்
- பாதுகாப்பு
- தொலைபேசி
- இணைய வசதி
- தனிப்பட்ட குளியலறை
- வண்ணத் தொலைக்காட்சி
பிரீமியர் அறை வசதிகள்[தொகு]
- குளுரூட்டும் வசதி
- மினி பார்
- பாதுகாப்பு
- தொலைபேசி
- இணைய வசதி
- தனிப்பட்ட குளியலறை
- வண்ணத் தொலைக்காட்சி
குறிப்புகள்[தொகு]
- ↑ "‘Lodged’ in the heart of New Delhi". Hindustan Times (30 August 2011).
- ↑ "Other group hotels". Oberoi Hotels & Resorts.
- ↑ "மெய்டன்ஸ் ஹோட்டல் தில்லி". cleartrip.com.
- ↑ "மெய்டன்ஸ் ஹோட்டல்".