மெப்கோ சிலேங் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெப்கோ சிலேங் தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைசெய்யும் தொழிலே தெய்வம்
வகைதனியார் கல்வி நிறுவனம்
உருவாக்கம்1984
சார்புசென்னை அண்ணா பல்கலைக்கழகம்
முதல்வர்முனைவர் எஸ். அறிவழகன்
அமைவிடம்சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்195 ஏக்கர்கள் (0.79 km2)
இணையதளம்http://www.mepcoeng.ac.in/
படிமம்:Mainblock.jpg
Main Block, Mepco Schlenk Engineering College

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகாசி நகரத்தில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரி மெப்கோ சிலேங் தொழில்நுட்பக் கல்லூரி ஆகும்.[1] 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் இயங்கி வரும் இந்த வரும் இந்த வரும் தேதி முதல் இயங்கி வரும் இந்த வரும் இந்த தேதி முதல் இயங்கி வரும் இந்த வரும் இந்த கல்லூரி ISO9001:2008 தர சான்றிதழை பெற்ற பெற்ற தனியார் கல்வி நிறுவனமாகும்.[2] திருமங்கலத்தை சேர்ந்த உலோகத்தூள் லிமிடெட் கம்பெனி (Metal Powder Company Limited),[3]மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த சிலெங் நிறுவனம் இணைந்து ஆரம்பித்துள்ள மெப்கோ சிலெங் தொண்டு நிறுவனங்கள் சார்பாக இந்தக் கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பித்த நாள் முதல் 2002ஆம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இந்த கல்லூரி அதன் அதன் கல்லூரி அதன் பின் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையுடன் இணைக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் சீரமைக்கப்பட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. [4][5] Bold text இந்தக் கல்லூரியில் வகுப்புகள், தேர்வுகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் எல்லாம் ஆங்கில வழியில் வழியில் எல்லாம் ஆங்கில வழியில் வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

1984 ஆம் ஆண்டு மெப்கோ சிலேங் தொண்டு நிறுவனங்களின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்லூரி மதுரை, சிவகாசி, திண்டுக்கல் போன்ற தென்தமிழகத்தின் மாணவர்களிடையே தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் பொறியியல் படிப்புகள் ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை வரை பரவலாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்திய அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்ற மெப்கோ நிறுவனம், ஜெர்மனி நாட்டை சேர்ந்த சிலேங் நிறுவனத்துடன் இணைந்து இந்த கல்லூரியை நிர்வகித்து வருகிறது. தலைசிறந்த பொருளாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றோரின் தேவையை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இளைஞர்களைக் கொண்டு பூர்த்தி செய்யும் எண்ணத்தில் இயங்கிவரும் இந்த நிறுவனம் பல்கலைக்கழக மானியக் குழுவினரால் 2013ஆம் ஆண்டு தன்னாட்சி அந்தஸ்தினை அடைந்தது. அதுமட்டுமல்லாமல் தன்னாட்சி கல்லூரிகளுக்கான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் தர சான்றிதழ் பெற்றது. உயர்திரு கே எம் ராமலிங்கம் அவர்களை நிர்வாக தலைவராகவும் உயர்திரு டென்சிங் அவர்களை கல்லூரி தாளாளர் ஆகவும் முனைவர் எஸ் அறிவழகன் அவர்களை முதல்வராகவும் கொண்டுள்ள இந்த நிறுவனம் செய்யும் தொழிலே தெய்வம் என்ற அதன் குறிக்கோளை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 35 ஆண்டுகளுக்கும்[6] மேலாக கல்விப்பணியில் சிறந்து விளங்கி வருகிறது.

துறைகள்[தொகு]

உயிர்மருத்துவப் பொறியியல், கட்டுமானப் பொறியியல், மின்னணுப் பொறியியல், கணினிப் பொறியியல், இயந்திரப் பொறியியல் தகவல் தொடர்புப் பொறியியல், மின் பொறியியல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வணிக மேலாண்மை மற்றும் கணினிப் பயன்பாடு போன்ற துறைகளில் ஏழு இளங்கலை பொறியியல் படிப்புகளும், ஒன்பது முதுநிலைப் படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது. முனைவர் பட்டப்படிப்புகளும் ஆராய்ச்சி படிப்புகளும் அனைத்து துறைகளிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது.[7]

ஆராய்ச்சித்துறை[தொகு]

இந்த தொழில்நுட்ப கல்லூரி ஆரம்பித்தது கல்லூரி ஆரம்பித்தது முதல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிக்காக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.[8] இத்தகைய ஊக்குவிப்புகள் காரணமாக 124 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல்வேறு அரசு நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லூரியில் சுமார் 3.6 கோடி ஆராய்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களும் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு நிதி அளித்து வருகிறது.

கல்லூரி கட்டமைப்பு[தொகு]

195 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனம் 1,12,000 சதுர அடி பரப்பில் கல்லூரி வளாகத்தை கொண்டுள்ளது. கல்லூரி பயன்பாட்டிற்கு என்ற தினமும் 10 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்க கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை ஒன்று கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பணம் வழங்கும் இயந்திரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காக உணவகம், வாகனம் நிறுத்தும் இடம், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மின் தோற்றிகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி தொடர்பகம் ஒன்றும் இந்த கல்லூரி மாணவர்களின் வசதிக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதும் வைஃபை மூலம் இணைய சேவைகள் வழங்கப்படுகிறது. கல்லூரி விடுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைக்காட்சி வசதி போன்ற சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. [9]

இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். எனவே அவர்களுக்காக கிட்டத்தட்ட 2800 மாணவ-மாணவிகள் தங்கும் வகையில் மாணவர்களுக்கு என்று ஐந்து விடுதிகளும் மாணவிகளுக்கு என்று ஐந்து விடுதிகளும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் விடுதிகள் கோதாவரி, காவிரி, கிருஷ்ணா, நர்மதா, பிரமபுத்திரா என்ற பெயரிலும் பெண்கள் விடுதிகள் கங்கா, யமுனா, சிந்து, மகாநதி, தாமிரபரணி என்றும் இந்தியாவின் முக்கியமான ஆறுகளின் பெயரை கொண்டுள்ளது.[10]

மாணவர் சங்கங்கள்[தொகு]

கீழ்க்கண்ட மெப்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சங்கங்கள் மூலம் மாணவர்களின் வாழ்க்கை தரம் மற்றும் கல்வித் தரம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சங்கங்களின் மூலம் மாணவர்கள் தலைமைப்பண்பு, மேலாண்மை பண்பு போன்றவைகளைக் கற்று பல்வேறு அமைப்புகளில் பங்கெடுக்க கற்றுக் கொள்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]