மென் எக்சு கதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மென் எக்சு கதிர்கள் (Soft x rays ) என்பன அதிக ஊடுருவல் த்ன்னை இல்லாத கதிர்களாகும். மாறாக வன்எக்சு கதிர்கள் ( Hard x rays) அதிக ஊடுருவல் தன்னையுடையன. கதிர்களின் ஊடுருவும் பண்பை ( Penetrating property) அவைகளைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப் பட்ட உயர் மின்னழுத்தமே தீர்மானிக்கிறது. அதிக கிலோ வோல்ட்டில் தோற்றுவிக்கப்படும் கதிர்கள் அதிக ஊடுருவல் பண்பைக் கொண்டிருக்கும். குறைந்த கிலோ வோல்டில் தோற்றுவிக்கப்படும் கதிர்கள் குறைந்த ஊடுருவல் பண்பைக் கொண்டிருக்கும். மென் எக்சு கதிர்கள் நோயறிகதிரியல் துறையில் ( Diagnastic radiology department) அதிகம் பயன்படாது. அவைகள் போதிய ஆற்றல் இன்மையால் உடலை ஊடுருவி செல்ல முடியாது. எனவே தேவையற்ற கதிர் வீச்சினை(Exposure) நோயாளிக்குக் கொடுக்கிறது. நோயாளி இவ்வாறு ஏற்கும் கதிர்ஏற்பளவு தவிர்க்கப் படவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு மென் கதிர்கள் அலுமினியத் தகட்டினால் (Alluminium Plate)F வடிகட்டப் படுகின்றன.

Fundamentals of rad. physics-Massy and meridith

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்_எக்சு_கதிர்&oldid=2756702" இருந்து மீள்விக்கப்பட்டது