மென்பொருள் உருவாக்க செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மென்பொருள் உருவாக்க செயல்முறை (Software Engineering Methodology) ஒரு மென்பொருள் ஆக்குவதற்கு எடுக்கப்படவேண்டிய படிமுறைகளை அல்லது நடவடிக்கைகளை விபரிக்கின்றது. பின்வரும் செயலாக்க படிகள் மென்பொருள் பொறியியல் வழுமுறைகளுக்கு அவசியம். அவை ஒன்றின் பின் ஒன்றாக தரப்பட்டிருந்தாலும் மென்பொருள் பொறியமைப்பில் சில படிகள் சுழற்சி முறையில் மீண்டும் செய்யப்படவேண்டி வரலாம். மேலும், சில படிகள் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படும். உதாரணமாக ஆவணப்படுத்தல் தொடக்கத்தில் இருந்து இடம்பெறும் ஒரு நடவடிக்கையே, எனினும் அந்த படியமைபில் ஆக்கப்படுத்தல் ஒரு பூரணத்துவம் அடையும்.

தேவைகள் பகுப்பாய்வு (Requirement Gathering and Analysis)
தேவைகள் அளவறிக்கை (Specification)
வடிவமைப்பு (Conceptual Design (System Design), Detail Design (Object Design))
நிறைவேற்றல் - நிரலாக்கம் (Coding)
ஆக்க பரிசோதனை (Developmental Testing, Operational Ready Testing, Deployment Testing)
ஆவணப்படுத்தல் (Documentation)
நிறுவுதல் (Deployment)
பராமரித்தல்/செப்பனிடுதல் (Maintenance)


மென்பொருள் பொறியியல் ஆக்க மாதிரிகள்[தொகு]

பொதுவாக மென்பொருள் பொறியியல் வழிமுறையின் அனைத்து படிகளும் மென்பொருள் உருவாக்கத்துக்கு அவசியமே. எனினும் எப்படி ஒரு மென்பொருளை உருவாக்குதென்பதற்கு பல ஆக்க மாதிரிகள் (Models) உண்டு. அவை தத்துவ, செயலாக்க, பயன்பாட்டு நிலைகளில் வேறுபட்டு நிற்கின்றன. அவற்றுள் எவை சிறந்தது என்பது மென்பொருள் பொறியியலாளர்களில் தேவை மற்றும் விருப்பு வெறுப்க்களை பொறுத்தது.

மென்பொருள் பொறியியல் முறைமைகளில் சில எடுத்துக்காட்டுகள்: