மென்படல ஒளியியல்
மென்படல ஒளியியல் நெகிழியால் ஆன தட்டையான வில்லையால் பெறப்படுகிறது. இது கண்ணாடி வில்லை போல் ஒளியை எதிரொளிப்பு அல்லது ஒளி விலகல் செய்யாமல் விளிம்பு விளைவு அடையச் செய்கிறது. நெகிழியில் சிராய்ப்பின் மூலம் உருவாகும் மிக நுண்ணிய காடிகள் (grooves), ஒளியை விளிம்பு விளைவிற்கு உட்படுத்துகிறது.[1] கண்ணாடியின் ஒளி ஊடுருவும் திறன் 90% ஆகும், ஆனால் நெகிழியால் ஆன மென்படலத்தின் ஒளி ஊடுருவும் திறன் 30-55% ஆகும்.[1]
பயன்கள்
[தொகு]MOIRE திட்டம்
[தொகு]அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி முகமை (Defense Advanced Research Projects Agency (DARPA)) தனது ஆராய்ச்சிக்கு மென்படல ஒளியியலைப் பயன்படுத்துகிறது. MOIRE திட்டம் என்பது (Membrane Optical Imager for Real-Time Exploitation (MOIRE)) மென்படல ஒளி உணர்வியைப் பயன்படுத்தி செயல்படும் திட்டமாகும். இத்திட்டத்தில் குறைந்த எடையுள்ள பலபடிகளைக் (polymer) கொண்ட மென்படலங்களை பயன்படுத்துகிறது. இவை 20 மீட்டர் நீளம் கொண்டவை, 36000 கிமீ தூரத்திலுள்ள 1 மீட்டர் அளவுள்ள பொருட்களையும் காண உதவுகிறது. மென்படல மிக நுண்ணிய காடிகள் 4 முதல் 100 மைக்ரோமீட்டர் வரையுள்ள அகலத்தைக் கொண்டுள்ளது.[1] இந்த திறனைக் கொண்ட கண்ணாடி தொலைநோக்கி அளவு மிகப் பெரியதாக இருப்பதால் எடுத்துச் செல்லக் கூடிய ஏவூர்திகளை வடிவமைக்க இயலாது. நெகிழி தொலைநோக்கியின் அளவு கண்ணாடி தொலைநோக்கி அளவை விட ஏழு மடங்கு குறைவான எடையையே கொண்டுள்ளது.[1] மடக்கக்கூடிய உலோகத் தகடுகளுக்கிடையே மென்படலங்கள் வைக்கப்படுகின்றன. புவிநிலைச் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் துணைக்கோள்களில் வைத்து சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படுகிறது. சுற்றுப்பாதையில் வெளிவிடப்படும் மென்படலங்கள் விரிவடைந்து செயல்படுகிறது.[1]
இவ்வகை தொலைநோக்கிகள் புவியில் அமைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் அகலம் கொண்ட கெக் தொலைநோக்கியை (Keck telescope) விட இரண்டு மடங்கு பெரியது. பூமியின் மேற்பரப்பில் 40 சதவீத பரப்பைக் காண உதவுகிறது. 10 கிமீ × 10 கிமீ பரப்பளவுள்ள பிம்பத்தை 1 மீட்டர் பிரிதிறனில் ( resolution ) காண உதவுகிறது.[1]
தரையில் அமைக்கப்பட்டுள்ள 5 மீட்டர் அகலம் கொண்ட மென்படல தொலைநோக்கியின் முன் வடிவம், மென்படல ஒளியியல் மூலம் புதிய பிம்பங்களை உருவாக்கியுள்ளது.[1]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- யூடியூபில் MOIRE video
- "2013/12/05 First Folding Space Telescope Aims to "Break the Glass Ceiling" of Traditional Designs". Darpa.mil. 2013-12-05. Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 2013-12-10.