மென்செதில் மலைச் சாரைப் பாம்பு
| மென்செதில் மலைச் சாரைப் பாம்பு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கோலுபிரிடே |
| பேரினம்: | |
| இனம்: | தை. லூசோனென்சிசு |
| இருசொற் பெயரீடு | |
| தையாசு லூசோனென்சிசு (குந்தர், 1873) | |
| வேறு பெயர்கள் | |
|
சாசைசூ லூசோனென்சிசு குந்தர், 1873[2] | |
மென்செதில் மலைச் சாரைப் பாம்பு (smooth-scaled mountain rat snake) என்று அழைக்கப்படும் தையாசு லூசோனென்சிசு (Ptyas luzonensis), கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த சாரைப்பாம்பு சிற்றினமாகும்.[3] இந்தப் பாம்பு மலைப்பாங்கான பகுதியில் வாழ்கிறது. ஆனால் இவை வேட்டையாடவும் தண்ணீர் குடிக்கவும் நீரோடைகளுக்கும் ஆறுகளுக்கும் செல்கின்றன. இவற்றின் விருப்பமான அல்லது பொதுவான இரையாகத் தவளைகள் உள்ளன. ஆனால் இவை கொறித்துண்ணிகள், வெளவால்கள், பல்லிகளையும் உண்ணுகின்றன. இந்த வகைப் பாம்பு 6 முதல் 8 அடி நீளம் வரை வளரக்கூடியது.
சொற்பிறப்பியல்
[தொகு]லூசோனென்சிசு என்ற குறிப்பிட்ட பெயர், இதன் கண்டுபிடிப்பு இடமான லூசோனைக் குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது.
புவியியல் வரம்பு
[தொகு]தையாசு லூசோனென்சிசு பிலிப்பீன்சு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். அங்கு இது நீக்ரோசு, லூசோன், பனாய், பொலில்லோ தீவுகளில் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brown, R., Gonzalez, J.C. & Gaulke, M. 2009. Ptyas luzonensis. The IUCN Red List of Threatened Species 2017: e.T96251357A96251360. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2009-2.RLTS.T169846A6681627.en. Downloaded on 9 June 2020.
- ↑ Boulenger, G.A. 1893. Catalogue of the snakes in the British Museum (Nat. Hist.) I. London (Taylor & Francis), 448 pp
- 1 2 Ptyas luzonensis at the Reptarium.cz Reptile Database. Accessed 9 June 2020.
மேலும் வாசிக்க
[தொகு]- Günther, 1873 : Notes on some reptiles and batrachians obtained by Dr. Adolf Bernhard Meyer in Celebes and the Philippine Islands. Proceedings of the Zoological Society of London, vol. 1873, p.165-17 (Full text).