மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டு | |
| வேறு பெயர்கள்
மெத்தில் பாரா-அயோடோபென்சோயேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 619-44-3 | |
| ChemSpider | 62484 |
| EC number | 210-597-1 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 69273 |
| |
| பண்புகள் | |
| C8H7IO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 262.05 g·mol−1 |
| தோற்றம் | வெண் திண்மம் |
| உருகுநிலை | 114 °C (237 °F; 387 K)[1] |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| H315, H319, H335, H411 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டு (Methyl 4-iodobenzoate) என்பது C8H7IO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் பாரா-அயோடோபென்சோயேட்டு என்ற பெயராலும் இந்த கரிமச் சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. IC6H4COOCH3 என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டை அடையாளப்படுத்தலாம்.[3] 4-அயோடோபென்சாயிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தர் ஆகவும், அல்லது மெத்தில் பென்சோயேட்டின் அயோடினேற்றப்பட்ட வழிப்பெறுதியாகவும் பார்க்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டை, மெத்தனாலுடன் 4-அயோடோபென்சாயிக் அமிலத்தைச் சேர்த்து பிசர் எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி தயாரிக்கலாம்.[4]
வினைகள்
[தொகு]
மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டின் அரைல்-அயோடைடு செயல்பாட்டு இணைப்பு வினைகளுக்கு உட்படுகிறது. அதாவது மும்மெத்தில்சிலில் அசிட்டிலீனுடன் சமச்சீர் சோனோகாசிரா இணைப்பு வினையில் ஈடுபட்டு இருமெத்தில் 4,4'-(எத்தைன்-1,2-டையில்)டைபென்சோயேட்டை உருவாக்குகிறது.மும்மெத்தில்சிலில் அசிட்டிலீன் தளத்தில் அசிட்டிலீனாக இழக்கப்படுகிறது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Methyl 4-iodobenzoate". ChemSpider. Retrieved 24 October 2023.
- ↑ "Methyl 4-iodobenzoate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ PubChem. "Methyl 4-iodobenzoate". PubChem (in ஆங்கிலம்). Retrieved 24 October 2023.
- ↑ 4.0 4.1 Gadzikwa, Tendai; Zeng, Bi-Shun; Hupp, Joseph T.; Nguyen, SonBinh T. (2008). "Ligand-elaboration as a strategy for engendering structural diversity in porous metal–organic framework compounds". Chemical Communications (31): 3672–3674. doi:10.1039/B714160B. பப்மெட்:18665295.
- ↑ Mio, Matthew J.; Kopel, Lucas C.; Braun, Julia B.; Gadzikwa, Tendai L.; Hull, Kami L.; Brisbois, Ronald G.; Markworth, Christopher J.; Grieco, Paul A. (2002). "One-Pot Synthesis of Symmetrical and Unsymmetrical Bisarylethynes by a Modification of the Sonogashira Coupling Reaction". Organic Letters 4 (19): 3199–3202. doi:10.1021/ol026266n. பப்மெட்:12227748.