உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தில் மெத்தேன்சல்போனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் மெத்தேன்சல்போனேட்டு
Skeletal formula
Skeletal formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தேன்சல்போனிக் அமில மெத்தில் எசுத்தர்
வேறு பெயர்கள்
மெத்தில் மெசைலேட்டு ;மெ.மெ.ச
இனங்காட்டிகள்
66-27-3 Y
ChEBI CHEBI:25255 N
ChemSpider 4013 N
EC number 200-625-0
InChI
  • InChI=1S/C2H6O3S/c1-5-6(2,3)4/h1-2H3 N
    Key: MBABOKRGFJTBAE-UHFFFAOYSA-N N
  • InChI=1/C2H6O3S/c1-5-6(2,3)4/h1-2H3
    Key: MBABOKRGFJTBAE-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19181 Y
ம.பா.த D008741
பப்கெம் 4156
  • COS(=O)(=O)C
பண்புகள்
C2H6O3S
வாய்ப்பாட்டு எடை 110.13 கி/மோல்
அடர்த்தி 1.3 கி/மி.லி 25 ° செல்சியசு
கொதிநிலை 202 முதல் 203 °C (396 முதல் 397 °F; 475 முதல் 476 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மெத்தில் மெத்தேன்சல்போனேட்டு (Methyl methanesulfonate) என்பது C2H6O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒர் ஆல்க்கைலேற்றும் முகவராகவும், புற்றுநோயூக்கியாகவும் இச்சேர்மம் செயல்படுகிறது. இனப்பெருக்க மண்டலத்தில் ஒரு நச்சூட்டியாகவும், தோல் மற்றும் புலன்களில் நச்சுத்தன்மையை அளிக்கும் ஒரு வேதிப்பொருளாகவும் இருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகிறது[1]. புற்று நோய் சிகிச்சையில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[2].

டி.என்.ஏ உடன் வினைகள்[தொகு]

டி.என்.ஏ விலுள்ள என்7-டியாக்சிகுவானோசின் மற்றும் என்3-டியாக்சியடினோசின்களில் பெரும்பாலும் மெத்தில் மெத்தேன்சல்போனேட்டு மெத்திலேற்றம் செய்கிறது. மிகவும் குறைந்த அளவிற்கு டிஎன்ஏ தளங்களிலுள்ள மற்ற ஆக்சிஜன் மற்றும் நைட்ரசன் அணுக்களையும், பாசுபேட்டுடையெசுத்தர் இணைப்புகளிலும் இது மெத்திலேற்றுகிறது. அமைப்பொத்த மறுசேர்க்கை-குறைபாடுள்ள செல்களை மெத்தில் மெத்தேன்சல்போனேட்டின் செயல்பாடுகள் பாதிக்குமென்பதால், டி,என்.ஏவில் உள்ள குரோமோசோம்களில் இரட்டைப் புரியிடை இடைவெளிகளை ஏற்படுத்தியதென நம்பப்பட்டது[3]. எனினும், அமைப்பொத்த மறுசேர்க்கை குறைபாட்டு சேதமடைந்த செல்களின் மறுபதிப்பு பிரிவுகளை சீரமைப்பது சிரமமென்றும், மெத்தில் மெத்தேன்சல்போனேட்டு இம்மறுபதிப்பு விரிவுகளை இடையில் நிறுத்திவிடுகிறதென்றும் தற்பொழுது நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]