உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தில் பாசுப்பீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்ப்புரு:Chembox OHS (set)
மெத்தில் பாசுப்பீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெத்தில்பாசுபேன்
இனங்காட்டிகள்
593-54-4
ChEBI CHEBI:35887
ChemSpider 62195
InChI
  • InChI=1S/CH5P/c1-2/h2H2,1H3
    Key: SAWKFRBJGLMMES-UHFFFAOYSA-N
  • InChI=1/CH5P/c1-2/h2H2,1H3
    Key: SAWKFRBJGLMMES-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68973
  • CP
பண்புகள்
CH3PH2
வாய்ப்பாட்டு எடை 48.02
தோற்றம் நிறமற்ற வாயு
கொதிநிலை −17.1 °C (1.2 °F; 256.0 K)
தீங்குகள்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

மெத்தில் பாசுப்பீன் (Methylphosphine) என்பது CH3PH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமப் பாசுபீன் சேர்மமான இது MePH2 என்றும் எழுதப்படுகிறது. துர்நாற்றம் வீசும் வாயுவாக காணப்படுகிறது. குளிர்வூட்டப்படும்போது நிறமற்ற திரவமாக மாறுகிறது. இதை பாசுபேனைடு உப்புகளின் மெத்திலேற்றம் மூலம் தயாரிக்கலாம்:[1]

KPH2 + MeI → MePH2 + KI

வினைகள்

[தொகு]

மெத்தில் பாசுப்பீன் சேர்மம் ஒரு முதன்மை பாசுபீனின் சிறப்பியல்புப் பண்புகளைக் கொண்டுள்ளது, அதாவது, இது RPH2 என்ற வகையைச் சேர்ந்த ஒரு சேர்மமாகும். இதை ஆக்சிசனேற்றம் செய்து மெத்தில்பாசுபோனசு அமிலமாக மாற்றலாம்.

MePH2 + O2 → MeP(H)O2H

இச்சேர்மம் புரோட்டானேற்றம் அடைந்து ஒரு பாசுபோனியம் அயனியைத் தருகிறது.

MePH2 + H+ → MePH3+

வலுவான காரங்களைப் பயன்படுத்தி, இதை புரோட்டான் நீக்கம் செய்வதன் மூலம் மெத்தில்பாசுபேனைடு வழிப்பொருட்களைப் பெறலாம்.

MePH2 + KOH → K[MePH] + H2O

மேற்கோள்கள்

[தொகு]
  1. W. L. Jolly (1968). "Methylphosphine". Inorganic Syntheses. Vol. 11. p. 124. doi:10.1002/9780470132425.ch25. ISBN 978-0-470-13170-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்_பாசுப்பீன்&oldid=4435795" இலிருந்து மீள்விக்கப்பட்டது