மெத்தில் சயனோ அக்ரைலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெத்தில் அக்ரைலேட்டு
மெத்ட்தில்Methyl cyanoacrylate
Structural fomula of methyl cyanoacrylate
Ball-and-stick model of the methyl cyanoacrylate molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2-சயனோபுரோப்-2-யீனோலேட்டு
வேறு பெயர்கள்
மெத்தில் 2-சயனோபுரோப்பியோனேட்டு
மெத்தில் 2-சயனோ அக்ரைலேட்டு
2-சயனோ-2-புரோப்பியோனிக் அமில மெத்தில் எசுத்தர்
எம்சிஏ
மெத்தில் ஆல்பா-சயனோ அக்ரைலேட்டு
மெக்ரைலேட்டு
சிஏ 7
செமிடின் 3000
கோவாப்ட்
சயனோபாண்டு 5000
ஈசுடுமான் 910
பிமோபிக்சு P 1048
மெக்ரைலாட்
மெக்கிரிலேட்டு
சி காமெட் 7000
திரி பாண்டு 1701[1]
இனங்காட்டிகள்
137-05-3 N
ChemSpider 8387 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8711
பண்புகள்
C5H5NO2
வாய்ப்பாட்டு எடை 111.1 கி/மோல்
அடர்த்தி 1.1
உருகுநிலை
கொதிநிலை 48 முதல் 49 °C (118 முதல் 120 °F; 321 முதல் 322 K) (2.5-2.7 மிமீ பாதரசம்)
30% (20°செ)[2]
ஆவியமுக்கம் 0.2 மிமீபாதரசம் (25°செ)[2]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 79 °C; 174 °F; 352 K [2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 2 ppm (8 மி.கி/மீ3) ST 4 பகுதி/மில்லியன் (16 மி.கி/மீ3)[2]
உடனடி அபாயம்
N.D.[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மெத்தில் சயனோ அக்ரைலேட்டு (Methyl cyanoacrylate) என்பது ஒரு மெத்தில் எசுத்தர், ஒரு நைட்ரைல், ஒரு ஆல்க்கீன் போன்ற பல வேதி வினைக்குழுக்கள் உள்ளடங்கிய ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குறைவான பாகுமைத் தன்மை கொண்ட நிறமற்ற திரவமாக மெத்தில் சயனோ அக்ரைலேட்டு காணப்படுகிறது. சயனோ அக்ரைலேட்டு பசைகளில் பயன்படுத்துவது இதன் முக்கியமான ஒரு பயனாகும் [3]. பொதுவாக எத்தில் சயனோ அக்ரைலேட்டை விட குறைவான அளவிலேயே மெத்தில் சயனோ அக்ரைலேட்டு பல வணிகப் பெயர்களில் சந்தையில் காணப்படுகிறது.

அசிட்டோன், மெத்தில் எத்தில் கீட்டோன், நைட்ரோமெத்தேன், டைகுளோரோமெத்தேன் [4] போன்ற கரிமக் கரைப்பான்களில் மெத்தில் சயனோ அக்ரைலேட்டு கரைகிறது. ஈரமான சூழலில் இச்சேர்மம் விரைவாக பலபடியாக மாறுகிறது.

பாதுகாப்பு[தொகு]

பலபடியை சூடுபடுத்தினால் பலபடி நிலையில் இருந்து அது மீட்சியடைந்து விடும். இதனால் உருவாகும் வாயுப் பொருட்கள் நுரையீரல் மற்றும் கண்களில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும். தொழிலாளர்களின் தாங்கும் அளவாக எட்டு மணி நேரத்தில் மில்லியனுக்கு 2 பகுதிகள் (8மி.கி/மீ3) அல்லது குறுகிய நேர பணிநிலைகளில் மில்லியனுக்கு 4 பகுதிகள் (16மி.கி/மீ3) அளவு வரை இருக்கலாம் என்று தேசிய தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் உடல்நல நிறுவனம் பரிந்துரைக்கிறது [5].

மேற்கோள்கள்[தொகு]