மெத்தில் எத்தில் கீட்டோன் பெராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெத்தில் எத்தில் கீட்டோன் பெராக்சைடு
MEK peroxide linear dimer.png
Methyl ethyl ketone peroxide Ball and Stick.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2'-பெராக்சிடை(பியூட்டேன்-2-பெராக்சோல்)
வேறு பெயர்கள்
2-[(2-ஐதரோபெராக்சிபியூட்டேன்-2-யைல்)பெராக்சி]பியூட்டேன்-2-பெராக்சோல்l
2-ஐதரோபெராக்சி-2-[(2- ஐதரோபெராக்சிபியூட்டேன் -2-யைல்)பெராக்சி]பியூட்டேன்
கீட்டோனோக்சு
மெப்பாக்சு
தெர்மாகியூர்
இனங்காட்டிகள்
1338-23-4 Yes check.svgY
Beilstein Reference
1759757
ChemSpider 2905622 Yes check.svgY
EC number 215-661-2
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த மெத்தில்+எத்தில்+கீட்டோன்+பெராக்சைடு
பப்கெம் 3672772
UN number 3105
பண்புகள்
C8H18O6
வாய்ப்பாட்டு எடை 210.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.170 கி.செ.மீ−3
கொதிநிலை 80 °C (176 °F) மேல் சிதைவடையும் [2]
கரையும்[1]
Explosive data
Shock sensitivity அதிகம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வெடிக்கும், நஞ்சு
R-சொற்றொடர்கள் R7 R22 R34
S-சொற்றொடர்கள் S3/7 S14 S26 S36/37/39 S45
தீப்பற்றும் வெப்பநிலை 75 °C (167 °F; 348 K)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
C மில்லியனுக்குப் 0.2 பகுதிகள் (1.5 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
N.D.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மெத்தில் எத்தில் கீட்டோன் பெராக்சைடு (Methyl ethyl ketone peroxide, MEKP) என்பது C8H18O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் ஒரு கரிமப் பெராக்சைடு ஆகும். அசிட்டோன் பெராக்சைடைப் போலவே இச்சேர்மமும் அதிக வெடிக்குந்தன்மை கொண்ட சேர்மமாகும். மெ.எ.கி.பெ சேர்மம் நிறமற்றதாக எண்ணெய் பசையுடன் உள்ள நீர்மநிலை சேர்ம்மாகும். ஆனால் அசிட்டோன் பெராக்சைடு திட்டவெப்ப அழுத்தத்தில் வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. மெ.எ.கீ.பெ சேர்மம் அதிர்ச்சி மற்றும் வெப்பநிலைக்கு சற்று குறைவான உணர்திறன் கொண்டதாகும். மற்றும் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கப்படும்போது அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. சோதனை நிபந்தனைகளைப் பொறுத்து, மெத்தில் எத்தில் கீட்டோன் மற்றும் ஐதரசன் பெராக்சைடின் பல்வேறு மாறுபட்ட கூட்டு விளைபொருள்கள் அறியப்படுகின்றன. 1906 ஆம் ஆண்டு C8H16O4, என்ற வளைய இருபடி முதன் முதலாக கண்டறியப்பட்டது.[3] பின்னர் தொடரப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தயாரிப்புகளில் நேர்கோட்டு இருபடிகள் மிகவும் பரவலாக இருப்பதாக கண்டறியப்பட்டன.[4] பொதுவாக வேதி விநியோக நிறுவனங்களில் வணிக ரீதியாக கிடைக்கும் வேதிப்பொருட்களின் இருப்பிலிருந்து மேற்கோளாகக் காட்டப்படுகிறது.[5]

30 முதல் 60% நீர்த்த மெ.எ.கீ.பெ கரைசல்கள் தொழிற்சாலைகளாலும் வினைத்திறனாளர்களாலும் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. நிறைவுறா பாலி எசுத்தர்களின் குறுக்கிணைப்பு, இழைக் கண்னாடிகளில் பிசின் வினை, வேதி இனமாற்றம் போன்ற வினைகளை இவ்வினையூக்கி முன்னெடுக்கிறது. இப்பயன்பாட்டிற்காகவே அதிர்ச்சிக்கான உணர்திறனைக் குறைக்க மெ.எ.கீ.பெ சேர்மமானது டைமெத்தில் பிதாலேட்டில், சைக்ளோயெக்சேன் பெராக்சைடு அல்லது டையல்லைல் பிதாலேட்டு போன்றவற்றில் கரைத்து பயன்படுத்தப்படுகிறது. இதே காரணத்திற்காக பென்சோயில் பெராக்சைடையும் பயன்படுத்தலாம். மெத்தில் எத்தில் கீட்டோன் பெராக்சைடு தோலின் மீது எரிச்சலை உண்டாக்குகிறது. மேலும் இது கடுமையான அரிப்பு பாதிப்பையும் அல்லது பார்வையிழப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0416". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 Record of 2-Butanone peroxide in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA), accessed on March 10, 2013
  3. Pastureau, P. (1907). "Le superoxyde de la méthyléthylcétone". Comptes Rendus 144 (2): 90–93. https://books.google.com/books?id=zloDAAAAYAAJ&pg=PA90. 
  4. Milas, N. A.; Golubović, A. (1959). "Studies in Organic Peroxides. XXV. Preparation, Separation and Identification of Peroxides Derived from Methyl Ethyl Ketone and Hydrogen Peroxide". Journal of the American Chemical Society 81 (21): 5824–5826. doi:10.1021/ja01530a068. 
  5. "2-Butanone peroxide". Sigma-Aldrich. பார்த்த நாள் 2011-12-05.

வெளி இணைப்புகள்[தொகு]