மெத்தில் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிசுடோகன், டி.எம்.டி.டி.எம், பார்பையாட்டு
இனங்காட்டிகள்
3735-92-0
பப்கெம் 19526
பண்புகள்
C4H9NS2
வாய்ப்பாட்டு எடை 135.24 g·mol−1
தோற்றம் நிறமற்றது அல்லது வெண்மையானது
உருகுநிலை 45–47 °C (113–117 °F; 318–320 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தில் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு (Methyl dimethyldithiocarbamate) என்பது (CH3)2NC(S)SCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் டைமெத்தில்டைதயோகார்பமேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. கரிமக் கந்தகச் சேர்மமான இது எளிய இருதயோகார்பமிக் எசுத்தர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வெண்மை நிறத்தில் ஆவியாகக் கூடிய திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவே கரைகிறது. ஆனால் கரிமக் கரைப்பான்களில் நன்கு கரைகிறது. ஒரு காலத்தில் பூச்சிக்கொல்லியாக இதைப் பயன்படுத்தினார்கள்.

இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு உப்புகளை மெத்திலேற்றம் செய்து மெத்தில் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு தயாரிக்கப்படுகிறது:[1]

(CH3)2NCS2Na + (CH3O)2SO2 → (CH3)2NC(S)SCH3 + Na[CH3OSO3].

டெட்ராமெத்தில்தயூரமிருசல்பைடுடன் மெத்தில் கிரிக்னார்டு வினைப்பொருள்களைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதைத் தயாரிக்கிறார்கள்:[2]

[(CH3)2NC(S)S]2 + CH3MgBr → (CH3)2NC(S)SCH3 + (CH3)2NCS2MgBr.

மேற்கோள்கள்[தொகு]

  1. A. D. Ainley, W. H. Davies, H. Gudgeon, J. C. Harland and W. A. Sexton (1944). "The Constitution of the So-Called Carbothialdines and the Preparation of Some Homologous Compounds". J. Chem. Soc.: 147-152. doi:10.1039/JR9440000147. 
  2. John R. Grunwell (1970). "Reaction of Grignard Reagents with Tetramethylthiuram Disulfide [yielding dithiocarbamates]". J. Org. Chem. 35: 1500–1501. doi:10.1021/jo00830a052.