மெத்தில் அனிசேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 4-மெத்தாக்சிபென்சோயேட்டு | |
| வேறு பெயர்கள்
பாரா-அனிசிக் அமில மெத்தில் எசுத்தர்; 4-(மெத்தாக்சிகார்பனைல்)அனிசோல்; 4-மெத்தாக்சிபென்சாயிக் அமில மெத்தில் எசுத்தர்; மெத்தில் பாரா-அனிசேட்டு; மெத்தில் பாரா-மெத்தாக்சிபென்சோயேட்டு; பாரா-மெத்தாக்சிபென்சாயிக் அமில மெத்தில் எசுத்தர்
| |
| இனங்காட்டிகள் | |
| 121-98-2 | |
| ChEBI | CHEBI:86903 |
| ChEMBL | ChEMBL1762668 |
| ChemSpider | 21108577 |
| EC number | 204-513-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 8499 |
| |
| UNII | 2MFL7873W9 |
| பண்புகள் | |
| C9H10O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 166.18 g·mol−1 |
| உருகுநிலை | 48 முதல் 51 °C (118 முதல் 124 °F; 321 முதல் 324 K)[1] |
| கொதிநிலை | 244 முதல் 245 °C (471 முதல் 473 °F; 517 முதல் 518 K)[1] |
| −98.6·10−6 செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் அனிசேட்டு (Methyl anisate) என்பது C9H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-அனிசிக் அமிலத்தினுடைய மெத்தில் எசுத்தராக இச்சேர்மம் கருதப்படுகிறது. அன்னாசிப்பூவில் மெத்தில் அனிசேட்டு சேர்மம் காணப்படுகிறது.
உணவுத் தொழிலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரிம சேர்மமான இது பொதுவாக சில வாசனை திரவியங்களுக்கு நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மெத்தில் அனிசேட்டு சேர்மத்தை மெத்தனாலுடன் 4-மெத்தாக்சிபென்சாயிக் அமிலத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் நேரடியாகத் தயாரிக்க முடியும். இதன் சிறப்பியல்பு வாசனை பைச்சோவா மரம் எனப்படும் அன்னாசிப்பழ மரங்களின் பூ வாசனையைப் போன்றதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Methyl anisate, chemexper.com