மெத்தில் அசிட்டோ அசிட்டேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 3-ஆக்சோபியூட்டனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 105-45-3 | |
| ChEBI | CHEBI:166454 |
| ChEMBL | ChEMBL3186053 |
| ChemSpider | 13874867 |
| EC number | 203-299-8 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 7757 |
| |
| UNII | CW4I82QAX1 |
| UN number | 1993 |
| பண்புகள் | |
| C5H8O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 116.12 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| மணம் | பழம் அல்லது ரம் |
| அடர்த்தி | 1.076 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 166 °C (331 °F; 439 K) |
| 40 கி/100 மி.லி (20 °செல்சியசு) | |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.411 |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| தீப்பற்றும் வெப்பநிலை | 70 °C (158 °F; 343 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் அசிட்டோ அசிட்டேட்டு (Methyl acetoacetate) என்பது C5H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டோ அசிட்டிக் அமிலத்தினுடைய மெத்தில் எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. இது ஒரு நிறமற்ற திரவமாகும். பல்வேறு வகையான சேர்மங்களின் உற்பத்தியில் ஒரு வேதியியல் இடைநிலையாக பரவலாகப் மெத்தில் அசிட்டோ அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் பல பண்புகள் பொதுவாகக் காணப்படும் எத்தில் அசிட்டோ அசிட்டேட்டு சேர்மத்தின் பண்புகளை ஒத்திருக்கும்.
தயாரிப்பு
[தொகு]இருகீட்டீனுடன் மெத்தனாலைச் சேர்த்து வினை புரியச் செய்து பெரிய அளவில், மெத்தில் அசிட்டோ அசிடேட்டு தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.[2]
பாதுகாப்பு
[தொகு]மெத்தில் அசிட்டோ அசிட்டேட்டு விலங்குகளுக்கு குறைந்த நச்சுத்தன்மையைக் கொடுக்கும். இது எளிதாக மக்கும் தன்மை கொண்டது என்பதால் சுற்றுச்சூழலுக்கு அபாயமில்லை.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 2021-12-19.
- ↑ 2.0 2.1 Riemenschneider, Wilhelm; Bolt, Hermann M. (2005). "Esters, Organic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a09_565.pub2. ISBN 3527306730.