மெத்தில்மக்னீசியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில்மக்னீசியம் குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரிடோ(மெத்தில்)மக்னீசியம்
வேறு பெயர்கள்
(குளோரோமக்னீசியோ)மீத்தேன்
இனங்காட்டிகள்
676-58-4 Y
75-16-1 (புரோமைடு) N
ChEBI CHEBI:51492 Y
ChemSpider 10610396 Y
InChI
  • InChI=1S/CH3.ClH.Mg/h1H3;1H;/q;;+1/p-1 Y
    Key: RQNMYNYHBQQZSP-UHFFFAOYSA-M Y
  • InChI=1/CH3.ClH.Mg/h1H3;1H;/q;;+1/p-1/rCH3Mg.ClH/c1-2;/h1H3;1H/q+1;/p-1
    Key: RQNMYNYHBQQZSP-OWCPXFRBAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12670
SMILES
  • [Cl-].[Mg+]C
பண்புகள்
CH3MgCl
வாய்ப்பாட்டு எடை 74.79 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திண்மம்
நீருடன் வினைபுரியும்
கரைதிறன் டை எத்தில் ஈதர், டெட்ரா ஐதரோ பியூரான் போன்றவற்றில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும், நீருடன் வினைபுரியும்
தீப்பற்றும் வெப்பநிலை -17°செ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மெத்தில்மக்னீசியம் குளோரைடு (Methylmagnesium chloride) என்பது CH3MgCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம உலோக சேர்மமாகும். மெத்தில்மக்னீசியம் குளோரைடு எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு சேர்மம் ஆகும். நிறமற்ற இச்சேர்மம் காற்றிலுள்ள ஈரப்பத்த்தினையும் உணர்ந்து செயலாற்றும் தன்மை கொண்டது. எளிய கிரிக்னார்டு வினைப்பொருளுக்கு மெத்தில்மக்னீசியம் குளோரைடு ஒரு உதாரணமாகும். வணிகரிதியாகவும் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. பொதுவாக டெட்ரா ஐதரோபியூரானில் ஒரு கரைசலாக சேமிக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

மெத்தில்மக்னீசியம் புரோமைடு [1], மெத்தில்மக்னீசியம் அயோடைடு, மெத்தில்மக்னீசியம் குளோரைடு போன்ற பொதுவாகக் காணப்படும் சேர்மங்கள் குறைவான சமான எடையும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டும் உருவாகின்றன. மெத்தில் குளோரைடுடன் எத்தில் ஈதரில் உள்ள மக்னீசியம் வினைபுரிந்து மெத்தில்மக்னீசியம் குளோரைடு உருவாகிறது [2].

பிற கிரிக்னார்டு வினைப்பொருள்களைப் போல மெத்தில்மக்னீசியம் குளோரைடு ஈதர் கரைப்பான்களால் அதிகமாக கரைப்பானேற்றம் செய்யப்படுகிறது. இதற்காக இரண்டு ஆக்சிசன் அணுக்கள் ஒருங்கிணைவு வழியாக நான்முகிகளாக பிணைக்கப்பட்ட மக்னீசியம் மையங்கள் தோன்றுகின்றன.

CH3MgCl(thf)2 இன் கட்டமைப்பு, வழங்கு கரைப்பான்களில் உள்ள இனத்தின் பிரதிநிதி

மெத்தில்லித்தியம் போல இதுவும் ஒரு செயற்கை மெத்தில் கார்பேனியன் சிந்தோனுக்கு சமமானதாகும். தண்ணீர் மற்றும் பிற புரோட்டானுடைய வினைப்பொருட்களுடன் இது வினைபுரிந்து மீத்தேனைக் கொடுக்கின்றன.

CH3MgCl + ROH → CH4 + MgCl(OR)

டையாக்சேனுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது மெத்தில்மக்னீசியம் குளோரைடு சிகூலெங்கு சமநிலை வழியாக டைமெத்தில்மக்னீசியமாக மாற்றமடைகிறது.

2 CH3MgCl + டையாக்சேன் → (CH3)2Mg + MgCl2(டையாக்சேன்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Raymond Paul, Olivier Riobé, Michel Maumy (1976). "(E)-4-Hexen-1-ol". Org. Synth. 55: 62. doi:10.15227/orgsyn.055.0062. 
  2. E. R. Coburn (1947). "3-Penten-2-ol". Org. Synth. 27: 65. doi:10.15227/orgsyn.027.0065. 

மேலும் வாசிக்க[தொகு]

  • Sakai, Shogo; Jordan, K. D. (1982). "Ab initio study of the structure and vibrational frequencies of the Grignard reagent methylmagnesium chloride". Journal of the American Chemical Society 104 (14): 4019. doi:10.1021/ja00378a047.