மெத்தாக்சிபுரோப்பேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-மெத்தாக்சிபுரோப்பேன் | |
| வேறு பெயர்கள்
புரோப்பேன், 1-மெத்தாக்சி- மெத்தில் புரோப்பைல் ஈதர் மெட்டோபிரில் நியோதைல் மெத்தில் என்-புரோப்பைல் ஈதர் | |
| இனங்காட்டிகள் | |
| 557-17-5 | |
| ChemSpider | 10709 |
| EC number | 209-158-7 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11182 |
| வே.ந.வி.ப எண் | KO2280000 |
| |
| UN number | 2612 |
| பண்புகள் | |
| C4H10O | |
| வாய்ப்பாட்டு எடை | 74.12 |
| அடர்த்தி | 0.7356 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 38.8 °C (101.8 °F; 311.9 K) |
| 30.5 கி/லி | |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.35837 (14.3 °செல்சியசு) |
| பிசுக்குமை | 0.3064 cP (0.3 °செல்சியசு) |
| மருந்தியல் | |
| Routes of administration |
சுவாசத்தில் |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | <−20 °C (−4 °F; 253 K) |
| வெடிபொருள் வரம்புகள் | 1.9-11.8 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மெத்தாக்சிபுரோப்பேன் (Methoxypropane) என்பது C4H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் புரோப்பைல் ஈதர் என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த ஈதர் ஒரு காலத்தில் பொது மயக்கமருந்தாகப் [1] பயன்படுத்தப்பட்டது. தெளிவான, நிறமற்ற இந்நீர்மம் எளிதில் தீப்பற்றி எரியக்கூடியது ஆகும். மெத்தாக்சிபுரோப்பேனின் கொதிநிலை 38.8 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும் [2].
மெட்டோபிரில் மற்றும் நியோதைல் என்ற வர்த்தகப் பெயர்களில் மெத்தாக்சிபுரோப்பேன் சந்தைப்படுத்தப்பட்டது. ஆற்றல் திறன் காரணமாக டை எத்தில் ஈதருக்கு மாற்றாக மெத்தாக்சிபுரோப்பேனைப் பயன்படுத்துகின்றனர். ஒரு மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஈதரை, எளிதாக தீப்பற்றாத நவீன ஆலசனேற்றமற்றப்பட்ட ஈதர்கள் இடப்பெயர்ச்சி செய்துவிட்டன.