மெத்தாக்சிதொலுயீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெத்தாக்சிதொலுயீன்கள் (Methoxytoluenes) என்பவை CH3OC6H4CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகின்ற மூன்று சமபகுதிய கரிமச் சேர்மங்களைக் குறிக்கும். மெத்திலனிசோல்கள் அல்லது கிரெசில் மெத்தில் ஈதர்கள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. மெத்தாக்சி குழுவும் ஒரு மெத்தில் குழுவும் இணைக்கப்பட்டுள்ள இருபதிலீடு பென்சீன் வளையத்தைக் கொண்டிருக்கின்றன. மூன்றும் நிறமற்ற தீப்பற்றி எரியக்கூடிய திரவங்கள் ஆகும். கரிம கரைப்பான்களில் இவை கரையக்கூடியவை ஆனால் தண்ணீரில் இலேசாக கரைகின்றன. மெத்தாக்சிபென்சாயிக் அமிலங்கள் மற்றும் மெத்தாக்சிபென்சால்டிகைடுகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மங்களாக இருந்தாலும் இவை பெரிய வணிக முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. [1]

வேதியியல் பண்புகள்[தொகு]

மெத்தாக்சிதொலுயீன் சமபகுதியங்கள்
Common names 2-மெத்தாக்சிதொலுயீன்
2-மெத்திலனிசோல்
ஆர்த்தோ கிரெசில் மெத்தில் ஈதர்
3-மெத்தாக்சிதொலுயீன்
3-மெத்திலனிசோல்
மெட்டா கிரெசில் மெத்தில் ஈதர்
4-மெத்தாக்சிதொலுயீன்
4-மெத்திலனிசோல்
பாரா கிரெசில் மெத்தில் ஈதர்
Structure 2-methylanisole.svg 3-methylanisole.svg 4-methylanisole.svg
பப்கெம் எண் [33637] [7530] [7731]
சிஏஎசு எண் [578-58-5] [100-84-5] [104-93-8]
உருகுநிலை -34.1 °செ (−31 °பா; 238 கெ) -47 °செ (−52.6 °பா; 226 கெ) -23 °செ (44.6 °பா; 280 கெ)
கொதிநிலை 171 °செ (318.2 °பா; 432 கெ) 175.5 °செ (323.6 °பா; 435 கெ) 175.5 °செ (323.6 °பா; 435 கெ)
Density 0.9798 கி/செ.மீ3 0.9716 கி/செ.மீ3 0.969 கி/செ.மீ3

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yasutaka Ishii, Takahiro Iwahama, Satoshi Sakaguchi, Kouichi Nakayama, Yutaka Nishiyama (1996). "Alkane Oxidation with Molecular Oxygen Using a New Efficient Catalytic System: N-Hydroxyphthalimide (NHPI) Combined with Co(acac)n (n = 2 or 3)". J. Org. Chem. 61 (14): 4520–4526. doi:10.1021/jo951970l. பப்மெட்:11667375. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தாக்சிதொலுயீன்&oldid=3342732" இருந்து மீள்விக்கப்பட்டது