மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம்
PY09 மெட்ரோ பிரைமா | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மெட்ரோ பிரைமா நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Metro Prima MRT Station Stesen MRT Metro Prima சீனம்: 美娜园站 | |||||||||||||||
| அமைவிடம் | கெப்போங் சாலை; கெப்போங் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°12′52″N 101°38′25″E / 3.214568°N 101.640366°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 12 புத்ராஜெயா | |||||||||||||||
| நடைமேடை | 1 தீவு மேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்மட்ட நிலை | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | PY09 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | PY09 16 சூன் 2022 | |||||||||||||||
| மின்சாரமயம் | உண்டு | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Metro Prima MRT station; மலாய்: Stesen MRT Metro Prima) என்பது மலேசியா, கோலாலம்பூர், கெப்போங், கெப்போங் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் முதலாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் இந்த நிலையம் 2022 சூன் 16 அன்று செயல்படத் தொடங்கியது.[1] PY08 செரி டாமன்சாரா தீமோர் எம்ஆர்டி நிலையத்திற்கும்; PY10 கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் இந்த நிலையம் அமைந்துள்ளது; மற்றும் இந்த நிலையத்தின் குறியீடு PY09 ஆகும்.[2] கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது.[3]
வரலாறு
[தொகு]இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் (தற்போது புத்ராஜெயா வழித்தடம்) மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம் ஒரு பகுதியாக இருக்கும் என 15 செப்டம்பர் 2016 அன்று எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தின் வடக்குப் பகுதியில் ஓர் உயர்ம்ட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.
மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம் சூன் 16, 2022-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[4][5] மேலும் அதே காலக்கட்டத்தில், PY01 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் தொடங்கி PY13 கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம் வரையிலான 12 புத்ராஜெயா வழித்தடத்தின் பிற நிலையங்களும் செயல்படத் தொடங்கின.
நிலைய அமைவு
[தொகு]கெப்போங் சாலை, மெட்ரோ பிரைமா சாலை சந்திப்பிற்கு அடுத்ததாக இந்த நிலையம் அமைந்துள்ளது. மெட்ரோ பிரைமா வணிக மையத்திற்கு இந்த நிலையம் முதன்மையாகச் சேவை செய்கிறது.
நிலைய அமைவிடம்
[தொகு]மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம், அடுக்கு மாடி அமைப்பைக் கொண்ட நிலையமாகும். தரை மட்டத்திலிருந்து இரண்டு நிலைகளைக் கொண்டு உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டது. முதல் நிலை இணைப்புவழி தளமாகும்; இரண்டாம் நிலையின் மேல் தளத்தில் இரட்டை வழித்தடங்களும்; இரண்டு நடைமேடைகளும் உள்ளன.
மெட்ரோ பிரைமா நிலைய வழித்தடத்தின் முனையத்திற்குச் செல்ல இரண்டு நடைமேடைகள் உள்ளன; நடைமேடை 1 புத்ராஜெயா சென்ட்ரலுக்கும், நடைமேடை 2 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்திற்கும் செல்கின்றன.
நிலைய அமைப்பு
[தொகு]| L2 எம்ஆர்டி நடைமேடை |
PY தெற்கு திசை | → 12 புத்ராஜெயா → PY41 புத்ராஜெயா சென்ட்ரல் (கெப்போங் பாரு எம்ஆர்டி) |
| PY41 மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் PY04 மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் | ||
| PY வடக்கு திசை | ← 12 புத்ராஜெயா → PY04 குவாசா டாமன்சாரா (செரி டாமன்சாரா தீமோர்) | |
| L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதி, பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம் |
| M | M தளம் | |
| G | தரை நிலை | நுழைவு/வெளியேறும் வழி, பேருந்து நிறுத்தம், வாடகை தனியார் வாகனங்கள் |
புத்ராஜெயா தொடருந்து சேவைக்காக, இந்த நிலையத்தின் மேல் பகுதியில் ஒரு நடுத்தர நடைமேடை உள்ளது.
பயண முனையங்களுக்குச் செல்ல நிலையத்தின் மேல் பகுதியில் 2 தளங்கள் உள்ளன.
- தளம் 1 - புத்ராஜெயா சென்ட்ரல்
- தளம் 2 - குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]| புத்ராஜெயா — மெட்ரோ பிரைமா நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | மேற்கு நிலையம் | மெட்ரோ பெர்டானா மேற்கு சாலை 1 ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) கெப்போங் தொழில்துறை பூங்கா (→) மெட்ரோ பிரைமா வாகனங்கள் நிறுத்தம் (→) செரி எடாரான் இலகு தொழில்துறை பூங்கா |
|
| B | தெற்கு நிலையம் | கெப்போங் ஜாலான் பெசார் வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) இயோன் மால் மெட்ரோ பிரைமா (→) பிளாசா மெட்ரோ பிரைமா (→) மெட்ரோ பிரைமா சாலை (→) மெட்ரோ 2 சாலை (→) முத்தியாரா மாக்மா சொகுசுமனை வளாகம் |
|
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| PY09 மெட்ரோ பிரைமா (நுழைவாயில் B) | KA06 கெப்போங் கொமுட்டர் நிலையம் ↺ | ||
| PY09 மெட்ரோ பிரைமா (நுழைவாயில் A) | தொழில்துறை பூங்கா ↺ | ||
| PY09 மெட்ரோ பிரைமா (நுழைவாயில் A) | பண்டாரு பாரு செலாயாங் ↺ | ||
| PY09 மெட்ரோ பிரைமா (நுழைவாயில் A) | செலாயாங் நகரம் ↺ | ||
காட்சியகம்
[தொகு]மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
[தொகு]- செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்
- டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம்
- கம்போங் செலாமாட் எம்ஆர்டி நிலையம்
- செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம்
- குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wahab, Farid (16 June 2022). "First Putrajaya MRT stretch opens today". The Star. https://www.thestar.com.my/metro/metro-news/2022/06/16/first-putrajaya-mrt-stretch-opens-today.
- ↑ Wahab, Farid (16 June 2022). "First Putrajaya MRT stretch opens today". The Star. https://www.thestar.com.my/metro/metro-news/2022/06/16/first-putrajaya-mrt-stretch-opens-today.
- ↑ "MRT Putrajaya Line Phase 1 | ONG&ONG". Archello. Retrieved 2025-08-27.
- ↑ "Suncon bags RM661m new jobs". The Malaysia Reserve (in ஆங்கிலம்). 3 April 2017. Retrieved 29 November 2022.
- ↑ "Awarded Contracts for MRT Putrajaya Line". mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
- ↑ "Bas Pengantara MRT Laluan Putrajaya | Laluan T112 (MRT Metro Prima — Taman Kepong)". RapidKL (in ஆங்கிலம்). 2022. Retrieved 8 July 2022.
- ↑ "Bas Pengantara MRT Laluan Putrajaya | Laluan T113 (MRT Metro Prima — Kepong Entrepreneurs Park)". RapidKL (in ஆங்கிலம்). 2022. Retrieved 8 July 2022.
- ↑ "Bas Pengantara MRT Laluan Putrajaya | Laluan T114 (MRT Metro Prima — Bandar Baru Selayang)". RapidKL (in ஆங்கிலம்). 2022. Retrieved 8 July 2022.
- ↑ "From Metro Prima MRT Station, take bus T152 to Selayang Jaya - Local - City News". 星洲网 Sin Chew Daily Malaysia Latest News and Headlines. 2023-10-23. Retrieved 2023-11-11.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Metro Prima MRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Metro Prima MRT Station | mrt.com.my
- Klang Valley Mass Rapid Transit website
- MRT Hawk-Eye View
