மெட்ரோ நியூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெட்ரோ நியூஸ் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 2005ம் ஆண்டிலிருந்து வெளிவரும் ஒரு நாளிதழாகும்.

வெளியீடு[தொகு]

எக்ஸ்பிரஸ் நிவுஸ் பேப்பர் சிலோன் லிமிட்டட், த.பெ.எண். 160, கொழும்பு (இது வீரகேசரி வெளியீடுகளில் ஒன்றாகும்)

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு நாளிதழ் என்றடிப்படையில் இலங்கை அரசியல், பொருளாதாரம், கலாசாரம், சமூக விடயங்களுக்கும், அரசியல் விடயங்களுக்கும், தமிழர் அரசியல் விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. அத்துடன், இணையத்தளங்களில் வெளிவரக்கூடிய முக்கிய செய்திகளை டைஜட்ஸ் முறையில் தொகுத்து வழங்கி வருகின்றது. விளையாட்டு, சினிமா, தொழில் வாய்ப்புகள், இந்தியா அரசியல், உலக அரசியல் போன்ற பல்வேறு விடயங்களையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. 'வரலாற்றில் இன்று' எனும் 'இன்றைய தின நிகழ்ச்சிகளின் தொகுப்பு'ம் உலக வளம் எனும் உலகச் செய்திகளின் தொகுப்பும் ஜனரஞ்சகமானதே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ரோ_நியூஸ்&oldid=1521608" இருந்து மீள்விக்கப்பட்டது