மெட்ராஸ் பிளையிங் கிளப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்ராஸ் பிளையிங் கிளப்
MFC
செயற் காலம்19 நவம்பர் 1929– இன்று வரை
நாடு இந்தியா
வகைபயிற்சி
பொறுப்புவணிக பறக்கும் பயிற்சி
அரண்/தலைமையகம்சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் 1929–2019
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் 2019–இன்று வரை
இணையதளம்[4]

மெட்ராஸ் பிளையிங் கிளப் (Madras Flying Club) என்பது இந்தியாவின், திருச்சியில் உள்ள ஒரு விமானக் கல்விக்கழகம் ஆகும். இது பைலட் பயிற்சி, விமானப் பராமரிப்பு மற்றும் கேபின் க்ரூ மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளை வழங்குகிறது. இது நாட்டின் பழமையான விமானக் கல்விக்கூடங்களில் ஒன்றாகும். முன்னதாக 19 நவம்பர் 1929 முதல் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் செயல்பட்டு வந்தது, அங்கிருந்த இட நெருக்கடியின் காரணமாக ஜனவரி 2020 லிருந்து திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலைய வளாகத்திற்க்கு மாற்றப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

அக்டோபர் 1929 இல், திரு.ஜி.விளாஸ்டோ எனும் பைலட், நாட்டின் இந்தப் பகுதியில் ஆகாய போக்குவரத்தை வளர்க்க விரும்பினார், சென்னையில் ஒரு பறக்கும் கிளப்பை நிறுவும் நோக்கத்திற்காக ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு 1929 நவம்பர் 19 அன்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மெட்ராஸ் காவலர் நிறுவனத்தில் நடந்தது. திரு.சிட்டி தலைமை வகித்தார். திரு கூப்பர், இந்திய ஏரோ கிளப்பின் அப்போதைய செயலாளர், மெட்ராஸில் ஒரு புதிய பறக்கும் கிளப்பை உருவாக்குவது குறித்து அங்கு கூடியிருந்த பெரிய கூட்டத்தில் உரையாற்றினார். ஏப்ரல் 1930 க்குள் ஒரு கிளப்பை உருவாக்கினால், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் நிதி மற்றும் பிற உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளார் என்று அவர் வலியுறுத்தியதை தொடர்ந்து மெட்ராஸ் பிளையிங் கிளப் உருவாக்கப்பட்டது.

4 மார்ச் 1930 அன்று, கிளப்பானது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநகத்துடன் இணைக்கப்பட்டது. லெப்டினனட் ஹெ.என். ஹாக்கர் கிளப்பின் முதல் இந்தியரல்லாத விமான பயிற்றுவிப்பாளர் ஆனார். கிளப்பின் முதல் இந்திய தலைமை விமான பயிற்றுவிப்பாளராக முகமது இஸ்மாயில் கான் நியமிக்கப்பட்டார். பல விமானிகளுக்கு பயிற்சி அளித்த இவரிடம் சிலர் தொழில் ரீதியாகவும் இன்னும் சிலர் பொழுதுபோக்கிற்க்காகவும் பயிற்சி பெற்றனர்.[2] 1930 களில் காரைக்குடியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஏ அண்ணாமலை, ஆவுடையப்பன் மற்றும் சோலையப்பன் ஆகியோர் தங்களுக்காக கானாடுகாத்தானில் ஒரு பிளையிங் கிளப்பை நிறுவினர்.[3]

கல்வி திட்டம்[தொகு]

சென்னை, சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி உடன் இணைந்து பி.பி.ஏ - ஏவியேஷன் & கிரவுண்ட் ஹேன்டிலிங், பி. எஸ். ஸி - ஏவியேஷன், கமர்சியல் பைலட் ஆகிய கல்வி திட்டங்களை கற்பிப்பதற்க்கு மெட்ராஸ் பிளையிங் கிளப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. [4]


குறிப்புகள்[தொகு]

  1. [1]Madras Flying Club all set to take off from Tiruchi
  2. Muthiah, S. (1 December 2003). "The magnificent men in Madras". தி இந்து (Chennai) இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040103133744/http://www.hindu.com/mp/2003/12/01/stories/2003120100050300.htm. 
  3. கானாடு காத்தான் பிளையிங் கிளப்[[2]தி ஹிந்து பத்திரிக்கை செய்தி
  4. மெட்ராஸ் பிளையிங் கிளப்பின் கல்வி ஒப்பந்தம் [[3] தி ஹிந்து பத்திரிக்கை செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_பிளையிங்_கிளப்&oldid=3315348" இலிருந்து மீள்விக்கப்பட்டது