மெட்ராஸ் காளி பாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதராஸ் காளி பாரி
தசரா காலத்தில் சென்னை காளி பாரி கோயில்
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:சென்னை
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:சுவாமி லோகேஸ்வரானந்த் மகராஜ்

மெட்ராஸ் காளி பாரி (Madras Kali Bari) என்பது இந்தியாவின் சென்னையில் மேற்கு மாம்பலம் அருகே அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.[1] பிப்ரவரி 3, 1981 அன்று பேலூர் மடத்தில் உள்ள ராமகிருஷ்ண இயக்கத்தின் செயலாளராக இருந்த சுவாமி லோகேஸ்வரானந்த் மகராஜ் என்பவரால் நிறுவப்பட்டதும், காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமான இந்த கோவில், கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள தக்ஷினேஷ்வர் காளி கோவில் அமைப்பின்படி, சென்னை நகரத்தில் வாழும் வங்காள மொழி பேசும் மக்களால் கட்டப்பட்டுள்ளது.[2]

இறைச்சேவை[தொகு]

இந்த கோயிலின் வளாகத்தில், தினமும் பஜனை கீதங்கள் பாடப்படுவதற்காக ஒரு தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.. அமாவாசை, துர்கா பூஜை மற்றும் காளி பூஜை போன்ற வங்காள பண்டிகைகளின் போது 25ஈ000 முதல் 30,000 பக்தர்கள் வரை கலந்துகொண்டு மிகப் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். அந்நாட்களின் போது கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் அல்லது இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

சமுதாயச் சேவை[தொகு]

இக்கோவில் நிர்வாகத்தித்தினரால் பெண்களுக்கு இலவசமாக தையல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன, இதன்மூலம் பெண்கள் கண்ணியம் மற்றும் தற்சார்பு வாழ்க்கையை வழங்கக்கூடிய ஒரு தொழிலைத் தொடர உதவுகிறது. மேலும் ஒரு இலவச மருத்துவ சுகாதார மையத்தையும் இக்கோவில் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதந்தோறும் இதன் மூலம் கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இக்கோவிலின் மூலம் ஒரு தர்மசாலா (விருந்தினர் மாளிகை) வசதியையும் வழங்கி வருகிறது. இங்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வரும் ஏழை நோயாளிகளுக்கும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும் தங்கவும், தங்களை சுத்தம் செய்துகொள்ளவும் சாப்பிட்டு இளைப்பாறவும் பயன்படுகிறது. அனைவருக்குமான இலவச பொது நூலகமும் உள்ளது. ஆன்மிக சொற்பொழிவுகள், திருமணங்கள், உபநயனம், நாமகரன் விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. S. Muthiah, தொகுப்பாசிரியர் (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. 1. Palaniappa Brothers. பக். 105. 
  2. "ஆலயம் பற்றி". www.madraskalibari.com.

மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_காளி_பாரி&oldid=3813491" இலிருந்து மீள்விக்கப்பட்டது