மெட்ராசு (அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெட்ராசு (Madras) என்பது ஐக்கிய அமெரிக்காவில், ஓரிகன் மாநிலத்தில் ஜெபர்சன் வட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இதன் மக்கள் தொகை 2010 கணக்கீட்டின்படி 6046 பேர். இந்த ஊரின் பழைய பெயர் பேசின் ஆகும். 1944 ஆம் ஆண்டில் பருத்தித் துணி ஒன்றின் பெயரான மெட்ராசு என்பதை இந்த ஊருக்கு வைத்துவிட்டதாக ஒரு செய்தி உள்ளது. இருப்பினும் உண்மையான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. [1]

பிற சிறப்புகள்[தொகு]

இந்த நகரத்தின் மொத்த பரப்பளவு 5.02 சதுர மைல்கள் ஆகும். 6046 பேர், 2198 வீடுகள், 1430 குடும்பங்கள் இந்த மெட்ராசு நகரில் வாழ்கிறார்கள். பெரும்பாலும் வெள்ளை நிற அமெரிக்கர்கள் 66.4 விழுக்காடும், பிற இனத்தவர்களான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், எசுப்பானியர்கள், ஆசிய கண்ட இனத்தவர்கள் குறைந்த தொகையிலும் வாழ்கிறார்கள்.[2]

சூரியக் கிரகண நிகழ்வு[தொகு]

சூரியக் கோட்டின் மையத்தில் மெட்ராசு அமைந்திருப்பதாலும், கடல் மட்டத்திலிருந்து உயரம், மாசு படாத ஒளி, தெளிவான வானம், விசாலமான திறந்த வெளி ஆகிய காரணங்களினாலும், 2017 ஆக்சுடு 21 ஆம் திகதியில் நிகழ இருக்கும் முழு சூரியக் கிரகணத்தை மெட்ராசு நகரில் பார்க்க மிகவும் வசதியாக இருக்கும். 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவில் தோன்றும் சூரியக் கிரகணம் இது.[3] ஓரிலக்கம் மக்கள் இதனைக் காண கூடுவார்கள் என எதிர்பார்ப்பதால் தங்கல் போன்ற அனைத்து வசதிகளையும் விரிவான ஏற்பாடுகளையும் அரசும் மக்களும் செய்து வருகிறார்கள். [4]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராசு_(அமெரிக்கா)&oldid=2404216" இருந்து மீள்விக்கப்பட்டது