மெங்கு-தைமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெங்கு-தைமூர்(Mengu-Timur) என்று அழைக்கப்படுபவர் தோகோகன் கான்[1] மற்றும் ஒயிரட் இனத்தை சேர்ந்த கோச்சு கதுன்[2] ஆகியோரின் மகன் ஆவார். படு கானின் பேரன் ஆவார். இவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாக இருந்தார். இவரது ஆட்சிக்காலம் 1266 முதல் 1280 வரை ஆகும்.

ஆரம்ப கால ஆட்சி மற்றும் வெளிநாட்டு கொள்கைகள்[தொகு]

இவரது ஆட்சிக்காலத்தில் மங்கோலியர்கள் தங்களது குடிமக்களான உருசிய இளவரசர்கள் உடன் பைசாந்தியம், லித்துவேனியா மற்றும் காக்கேசியாவிலிருந்த ஆலன்கள் ஆகியோருக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வரலாற்றாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஜர்லிக்கானது மெங்கு- தைமூருக்காக எழுதப்பட்டதாகும். அதில் தங்க நாடோடி கூட்டத்திற்கு கப்பம் கட்டுவதில் இருந்து உருசிய மரபுவழி திருச்சபையை விடுவிக்க வேண்டும் என்பது சம்பந்தமான தகவல்கள் அடங்கியிருந்தன. எனினும் மெங்கு- தைமூர் ஷாமன் மதத்தை சேர்ந்தவர் ஆவார். மெங்கு-தைமூரின் ஆட்சிக்காலத்தில் செனோவா வணிகர்கள் காஃபா நகரத்தை மங்கோலியர்களிடமிருந்து வாங்கினர். எனினும் அந்த இத்தாலிய வணிகர்கள் மங்கோலியர்களுக்கும் மற்றும் சில நேரங்களில் நோகைக்கும் வரி கட்டினர்.

ஜெர்மானிய சிலுவைப் போர் வீரர்கள் மற்றும் வித்துவேனியர்கள் உருசிய நிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கினர். 1268 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய படைகளை நோவ்கோரோடுக்கு அனுப்பி தன்னுடைய உருசிய இளவரசர்கள் டென்மார்க் எஸ்டோனியாவை கைப்பற்ற உதவினார். எனினும் வெசன்பர்க் யுத்தத்திற்குப் பிறகு பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். 1274 ஆம் ஆண்டு உருசிய குறுநில மன்னர்களில் கடைசியாக எஞ்சியிருந்த ஸ்மோலென்ஸ்க் இவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வரப்பட்டது. 1275 ஆம் ஆண்டு கலிசியா-வோலினியாவின் லெவ்வின் வேண்டுகோளுக்கிணங்க இவர் தனது ராணுவத்தை உருசிய இளவரசர்கள் உடன் லித்துவேனியாவிற்கு அனுப்பினார்.

1277 ஆம் ஆண்டு தன்னுடைய உருசிய இளவரசர்களின் உதவியுடன் ஆலன் நகரமான தியாட்கோ மீது நடத்தப்பட்ட நீண்டநாள் முற்றுகையை முடித்தார். கசன் நகரத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட வோல்கா பல்கேரியர்களை நொறுக்கினார். தன்னுடைய நாட்டு பகுதிகளுக்குள் சுதந்திரமாக பயணம் செய்ய ஜெர்மனிய வணிகர்களுக்கு அனுமதி வழங்கினார்.

1280 ஆம் ஆண்டு இவர் போலந்துக்குக்கெதிராக போர் நடவடிக்கைகளை எடுத்தார். எனினும் அது தோல்வியில் முடிந்தது. தோல்விக்கு பிறகு சிறிது காலத்திலேயே இறந்தார்.[3]

உசாத்துணை[தொகு]

  1. Morgan, David. The Mongols. p. 224.
  2. Rashid al-Din. Universal History. Vol. Vol. II. p. 102. {{cite book}}: |volume= has extra text (help)
  3. New History of Yuan. Vol. vol. 106. {{cite book}}: |volume= has extra text (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெங்கு-தைமூர்&oldid=3187779" இலிருந்து மீள்விக்கப்பட்டது