மெக்சிக மரியா பொம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்சிகோ நகரின் சான் ஏஞ்சலில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள "மரியா" பொம்மை வரிசை

மெக்சிக மரியா பொம்மை ( Mexican rag dolls) என்பவை மெசிகோவின் பழங்குடி மக்களால் முழுக்கத் துணிகளைக் கொண்டு செய்யப்படும் பொம்மைகள் ஆகும். இவை மெக்சிகோவின் மத்திய மாநிலமான க்வெரெட்டோவின் தெற்கில் பெரும்பாலும் மிகுதியாக தயாரிக்கப்படுகின்றன. மெக்சிகோவில் இந்தவகை துணி பொம்மைகளின் உருவாக்கமானது நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாக உள்ளது, இவை பழங்குடியின மக்களின் தோற்றத்தை உடையதாக பிரபலமாக அறியப்படுகின்றன. குறிப்பாக இவை அமேல்கோ கிராமத்தைச் சேர்ந்த ஓடோமி இனப் பெண்களின் வருமான வாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1970 க்கு முன்னதாகவே சுற்றுலா அரங்குகளில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அமேல்கோ பழங்குடி மக்களால் உருவாக்கப்படும் இந்த பொம்மைகள் அந்த மக்கள் அணியும் வண்ண வண்ண உடைகளை பிரதிபள்க்கும் வித்அத்தில் வண்ண மயமான துணிகளில், சிரித்த முகத்துடனும், ரிப்பன் பின்னிய கேசத்துடன் கூடிய பெண் பொம்மைகளாக உள்ளன.

வரலாறு[தொகு]

மெக்சிக மரியா பொம்மை

மெகிசோகோ பழங்குடி மக்களிடையே பழைய துணிகளைக் கிழித்து பொம்மைகளாகச் செய்யும் வழக்கம் கொண்டவர்கள். இந்தப் பொம்மைகளைச் செய்யும் கலைஞர்கள் அக்குடும்பத்தலைவியான தாய் அல்லது பாட்டியாக இருந்தார்கள். அமேல்கோ கிராமத்தைச் சேர்ந்த ஓடோமி இனப் பெண்களிடம் இருக்கும் பொம்மை செய்யும் திறனைப் பார்த்து வியந்த மெக்சிக ஓவியர் டீகோ ரிவேராவின் மகள் குவாடலுப் ரிவேரா என்பவர், உள்ளூர்ப் பெண்களைப் பயிற்றுவித்து இதை ஒரு தொழிலாக மாற்றினார்.

மெக்சிக ஆதிவாசி மக்களின் அசல் மரியாக்கள் அழகு தனித்துவம் வாய்ந்தவையாக, பெண் கலைஞர்களால் கையிலும் தையல் இயந்திரத்திலும் தயாரிக்கப்படுகின்றன. இவை வழக்கமான துணி பொம்மைகளைப்போல், பஞ்சால் நிரப்பப்படாமல், கனத்த துணியைச் சுற்றி, மடக்கி, தைத்து 3 முதல் 40 சென்டிமீட்டர் அளவிலான பொம்மைகளாக உருவாக்கப்படுகிறன. சிவப்பு, கறுப்பு என அடர்வண்ணங்களே இந்தப் பொம்மைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஷங்கர் (14 மார்ச் 2018). "ஓ! மெக்சிக மரியா". கட்டுரை. தி இந்து தமிழ். 31 மார்ச் 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிக_மரியா_பொம்மை&oldid=3578102" இருந்து மீள்விக்கப்பட்டது