மெக்சிக்கோவின் பொருளாதாரம்
மெக்சிக்கோவின் பொருளாதாரம் | |
---|---|
மெக்சிக்கோ மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் மிக முக்கியமான நிதிய, பொருளாதார மையமாக மெக்சிக்கோ நகரம் உள்ளது. | |
நாணயம் | மெக்சிக்கோவின் பெசோ (MXN$) 1 US$ = 17.20 MXN (2015) |
நிதி ஆண்டு | 1 சனவரி முதல் 31, திசம்பர் வரை |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | ஏபெக், நாஃப்டா, ஓஈசிடி, உ.வ. அ |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $1.2876 டிரில்லியன் (பெயரளவு; 2014)[1] $1.9266 டிரில்லியன் (கொ.ஆ.ச; 2014)[1] |
மொ.உ.உ வளர்ச்சி | 2.99%[2] (2014) |
நபர்வரி மொ.உ.உ | $10,767.25 (2014) (பெயரளவு)[1] $16,111.46 (2014) (கொ.ஆ.ச)[1] |
துறைவாரியாக மொ.உ.உ | வேளாண்மை: 3.6%, தொழிற்துறை: 36.6%, சேவைகள்: 59.8% (2013 மதிப்.)[3] |
பணவீக்கம் (நு.வி.கு) | 4% (2013 மதிப்.) |
கினி குறியீடு | 48.1 (2012) [4] |
தொழிலாளர் எண்ணிக்கை | 52.9 மில்லியன் (2014 மதிப்.) |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | வேளாண்மை: 13.4%, தொழில்: 24.1%, சேவைகள்: 61.9% (2011) |
வேலையின்மை | 4.7% (2014) |
முக்கிய தொழில்துறை | மின்னணுவியல், உணவு மற்றும் பானங்கள், புகையிலை, வேதிப்பொருள், இரும்பும் எஃகும், பாறை எண்ணெய், சுரங்கத் தொழில், துணி, உடை, தானுந்து ஊர்திகள், நுகர்வோர் நிலைப்பொலுட்கள், சுற்றுலா |
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 39வது [5] |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | $406.4 பில்லியன் (2014 மதிப்.)[6] |
ஏற்றுமதிப் பொருட்கள் | தானுந்து, மின்னணுவியல், தொலைக்காட்சி, கணினி, செல்லிடத் தொலைபேசி, திரவப் படிகக் காட்சி, எண்ணெய் மற்றும் எண்ணெய்ப் பொருட்கள், வெள்ளி, பழம், காய்கறி, காப்பி, பருத்தி. |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | ஐக்கிய அமெரிக்கா 78.8% (2013 மதிப்.)[7] |
இறக்குமதி | $407.1 பில்லியன் (2014 மதிப்.)[6] |
இறக்குமதிப் பொருட்கள் | உலோகப்பணி எந்திரங்கள், இரும்பாலை பொருட்கள், வேளாண் எந்திரங்கள், உலோகங்கள், தானுந்து பாகங்கள், வானூர்தி, வானூர்தி பாகங்கள், எண்ணெய் தயாரிப்பு எந்திரங்கள் |
முக்கிய இறக்குமதி உறவுகள் | ஐக்கிய அமெரிக்கா 49.1% சீனா 16.1% சப்பான் 4.5% (2013 est.)[8] |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | $341 பில்லியன் (2010)[9] / மொ.உ.உவில் 37.7% (2013 மதிப்.) |
வருவாய் | $234.3 பில்லியன் (2010 மதிப்.)[9] |
செலவினங்கள் | $263.8 பில்லியன் (2010 மதிப்.)[9] |
பொருளாதார உதவி | $189.4 மில்லியன்ன் (2008) |
கடன் மதிப்பீடு | |
அந்நியச் செலாவணி கையிருப்பு | $198.320 பில்லியன் (ஏப்ரல் 2015)[12] |
Main data source: CIA World Fact Book ' |
மெக்சிக்கோவின் பொருளாதாரம் ஆனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கைப்படி உலகப் பொருளாதாரங்களில் பெயரளவில் 15ஆவதாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 11ஆவதும் ஆகும்.[13] 1994இல் ஏற்பட்ட நிதி நெருக்கடியை அடுத்து ஆட்சியாளர்கள் நாட்டின் பருப்பொருளியல் அடிப்படைகளை மேம்படுத்தியுள்ளனர். 2002இல் தென்னமெரிக்காவின் நெருக்கடியால் மெக்சிக்கோ பாதிப்படையவில்லை. இக்காலத்தில் குறைவான வளர்ச்சியைக் கண்டபோதும் அது நேர்மறையான வளர்ச்சியாக இருந்தது. இருப்பினும் 2008 நிலைத்தேக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிக்கோவும் ஒன்றாக இருந்தது; இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6%கும் கூடுதலாக குறைந்தது.
மெக்சிக்கோவின் பருப்பொருளியல் நிலைத்தன்மையால் பணவீக்கமும் வட்டி வீதங்களும் மிகவும் குறைந்திருக்கின்றது; தனிநபர் வருமானமும் கூடியுள்ளது. இருப்பினும் நகர்ப்புற / ஊரக மக்களிடையேயும் வடக்கு/தெற்கு மாநிலங்களிடையேயும் செல்வந்தர்/ வறியவர் இடையேயும் பொருளியல் நிலையில் பெரும் வேறுபாடு உள்ளது. [14] கட்டமைப்பை மேம்படுத்துவதும் வரி சீர்திருத்தங்களும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும் வருமானங்களுக்கிடையேயான பெரும் இடைவெளியைக் குறைப்பதும் அரசை எதிர்நோக்கியுள்ள சில சிக்கல்களாகும். வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.6 விழுக்காடாக உள்ளது. 2013இல் இது 34 பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளிலும் மிகவும் குறைந்ததாகும்.[15]
விரைவாக வளர்ந்து வரும் தற்கால தொழில் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கிய மெக்சிக்கோ பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகளின் பங்கு கூடி வருகின்றது. அண்மைய ஆட்சியாளர்கள் துறைமுகங்கள், தொடருந்து போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்னாக்கம், இயற்கை வளிம்ப் பங்கீடல், வானூர்தி நிலையங்கள் ஆகியவற்றை தனியார் துறைக்குத் திறந்துள்ளனர். இது போட்டியை வளர்க்கவும் கட்டமைப்பை விரைந்து மேம்படுத்தவும் இக்கொள்கையை செயலாக்குகின்றனர். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக 90%க்கும் கூடிய மெக்சிக்கோ வணிகம் நாடுகளுக்கிடையேயான கட்டற்ற வணிக உடன்பாடுகளின் கீழ் நடக்கின்றது; ஐரோப்பிய ஒன்றியம், சப்பான், இசுரேல், நடு மற்றும் தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 40 நாடுகளுடன் மெக்சிக்கோ கட்டற்ற வணிக உடன்பாடு கொண்டுள்ளது. இவற்றில் 1994 முதல் செயற்பாட்டுக்கு வந்த வட அமெரிக்க கட்டற்ற வணிக உடன்பாடு (NAFTA) மிகவும் முதன்மையானதாகும். இது 1992இல் மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா அரசுகளுக்கிடையே கையொப்பமானது. 2006இல் இவ்விரு நாடுகளுடனான வணிகம் மெக்சிக்கோவின் ஏற்றுமதியில் 90% ஆகவும் இறக்குமதியில் 55% ஆகவும் இருந்தது.[16] உலகின் பெரிய வணிக நிறுவனங்களைப் ப்பட்டியலிடும் போர்ப்சு குளோபல் 2000 2008ஆம் ஆண்டுப் பட்டியலில் மெக்சிக்கோவின் 16 நிறுவனங்கள் இருந்தன.[17]
மெக்சிக்கோவில் 78 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு மற்றும் உலக வணிக அமைப்பு ஆண்டில் பணி புரிந்த நேரத்தை அடிப்பையாகக் கொண்டு இந்தத் தொழிலாளர்களை உலகத் தொழிலாளர்களில் மிகவும் கடினமாக உழைப்பவர்கள் என தரப்படுத்தியுள்ளன. இருப்பினும் மனித-மணிக்கு இலாபம் குறைவாகவே உள்ளது.[18][19][20][21][22]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 IMF (1 January 2012). "International Monetary Fund economic statistics for Mexico 2012". IMF.
- ↑ "Mexico overview". World Bank.
- ↑ "The World Factbook". Archived from the original on ஜனவரி 29, 2018. பார்க்கப்பட்ட நாள் June 11, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "GINI index (World Bank estimate)". பார்க்கப்பட்ட நாள் June 11, 2015.
- ↑ "Doing Business in Mexico 2015". உலக வங்கி. Archived from the original on 2018-08-22. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.
- ↑ 6.0 6.1 "CIA – The World Factbook". Cia.gov. Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.
- ↑ "Export Partners of Mexico". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2013. Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2015-06-28.
- ↑ "Import Partners of Mexico". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2013. Archived from the original on 2018-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-28.
- ↑ 9.0 9.1 9.2 "Mexico. Secretary of Hacienda and Public Credit (exchange rate from cia factbook)". Apartados.hacienda.gob.mx. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2011-04-16.
- ↑ "Sovereigns rating list". Standard & Poor's. பார்க்கப்பட்ட நாள் December 26, 2013.
- ↑ 11.0 11.1 11.2 Rogers, Simon; Sedghi, Ami (April 15, 2011). "How Fitch, Moody's and S&P rate each country's credit rating". The Guardian (UK). http://www.guardian.co.uk/news/datablog/2010/apr/30/credit-ratings-country-fitch-moodys-standard. பார்த்த நாள்: May 31, 2011.
- ↑ "International Reserves and Foreign Currency Liquidity – MEXICO". International Monetary Fund. May 18, 2011. பார்க்கப்பட்ட நாள் June 26, 2015.
- ↑ மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்
- ↑ "Mexico, World Bank's Country Brief". பார்க்கப்பட்ட நாள் February 19, 2007.
- ↑ OECD: Compare your country by tax rate, access date 13 December 2014
- ↑ Mexico பரணிடப்பட்டது 2018-01-29 at the வந்தவழி இயந்திரம். The World Factbook. CIA.
- ↑ forbes (2008-04-02). "Latest release". forbes. http://www.forbes.com/lists/2008/18/biz_2000global08_The-Global-2000-Canada_10Rank.html. பார்த்த நாள்: 2006-07-01.
- ↑ "The Hardest Working Countries In The World". Business Insider. April 13, 2011. பார்க்கப்பட்ட நாள் June 11, 2015.
- ↑ "What country works the most each day?". CNN. April 13, 2011. http://business.blogs.cnn.com/2011/04/13/what-country-works-the-most-each-day/.
- ↑ Thomas, Leigh (April 12, 2011). "Hard-working Mexicans upstage other OECD nations". Reuters இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 6, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151006093641/http://www.reuters.com/article/2011/04/12/us-oecd-work-idUSTRE73B59720110412.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ Booth, William (May 3, 2011). "Siesta? What siesta? Mexicans work longest hours in world". The Washington Post. http://www.washingtonpost.com/world/siesta-what-siesta-mexican-work-longest-hours-in-world/2011/04/27/AF3O0yTF_story.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- (எசுப்பானியம்) Mexican Council for Economic and Social Development பரணிடப்பட்டது 2005-12-01 at the வந்தவழி இயந்திரம்
- (எசுப்பானியம்) Mexico Development Gateway பரணிடப்பட்டது 2005-10-27 at the வந்தவழி இயந்திரம்
- Mexican Economy and the U.S. from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives
- Mexico's Economy: Current Prospects and History lecture by Professor Robin Grier, March 2013
- OECD's Mexico country Web site and OECD Economic Survey of Mexico
- The Mexican Economy and the 2012 Elections from the Center for Economic and Policy Research, June 2012
- Comprehensive current and historical economic data பரணிடப்பட்டது 2013-03-07 at the வந்தவழி இயந்திரம்
- Information about banks in Mexico
- World Bank Mexico 2012 Trade Summary Statistics
- Tariffs applied by Mexico as provided by ITC's Market Access Map[தொடர்பிழந்த இணைப்பு], an online database of customs tariffs and market requirements.