மெக்கா பாரந்தூக்கி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மக்கா பாரந்தூக்கி விபத்து
நாள்செப்டம்பர் 11, 2015 (2015-09-11)
17:45 AST (UTC+03:00)
அமைவிடம்மஸ்ஜித் அல்-ஹராம், மக்கா, சவூதி அரேபியா
புவியியல் ஆள்கூற்று21°25′21″N 39°49′34″E / 21.4225°N 39.8262°E / 21.4225; 39.8262ஆள்கூறுகள்: 21°25′21″N 39°49′34″E / 21.4225°N 39.8262°E / 21.4225; 39.8262
காரணம்பாரந்தூக்கி முறிவு
இறப்புகள்107+[1][2]
காயமுற்றோர்238[1][2]

மெக்கா பாரந்தூக்கி விபத்து என்பது சவூதி அரேபியாவின் மெக்கா நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் நடந்த விபத்தினைக் குறிக்கும். கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பாரந்தூக்கியொன்று, 11 செப்டம்பர் 2015 அன்று உடைந்து விழுந்த இந்த விபத்தில் 107 பேர் உயிரிழந்தனர். சுமார் 238 பேர் காயமடைந்தனர்.[3]

ஒன்பது இந்தியர்கள், ஆறு மலேசியர்கள், பதினைந்து இரானியர்கள், இருபது இந்தோனேசியர்கள், மற்றும் பதினாறு பாக்கித்தானியர்கள் காயமடைந்தனர்.[4][5][6][7]

விவரம்[தொகு]

ஆற்றல்மிக்க சூறாவளிக் காற்றின் காரணமாக உடைந்த பாரந்தூக்கி, பள்ளிவாசலின் மேற்கூரை வழியாக விழுந்ததாக சவூதி நிர்வாகம் தெரிவித்தது. மாலை 5.45 - 6.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் தெரிவித்தன. விபத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, கன மழை பெய்தது. மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும் அறியப்படுகிறது.

உலக நாடுகளின் அஞ்சலி[தொகு]

இந்தியா[தொகு]

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தனது வேண்டுதல்களையும் துணைக் குடியரசுத்தலைவர் ஹமித் அன்சாரி தெரிவித்தார். தனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]