உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்கல்வெயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்கல்வெயிட்டு-(Y)
Mckelveyite-(Y)
கனடாவில் கிடைத்த மெக்கல்வெயிட்டு-(Y)
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுBa3Na(Ca,U)Y(CO3)6·3H2O
இனங்காணல்
நிறம்எலுமிச்சை மஞ்சள், பச்சை சாம்பல், செம்பழுப்பு, அடங்கிய கரிமப் பொருட்களால் கருப்பாகவும் இருக்கலாம்.
படிக இயல்புதட்டையானது, பிரமிடு
படிக அமைப்புமுச்சரிவு
இரட்டைப் படிகமுறல்மும்மடிப்பு {0001})
பிளப்புதெளிவற்றது
மோவின் அளவுகோல் வலிமை3.5–4
மிளிர்வுபளபளக்கும், உயவுத்தன்மை,
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் முதல் ஒளிபுகாது வரை
ஒப்படர்த்தி3.25
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.550–1.554 nβ = 1.550–1.554 nγ = 1.649–1.658
இரட்டை ஒளிவிலகல்δ 0.0990–0.1040
பலதிசை வண்ணப்படிகமைபுலப்படும்
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2]

மெக்கல்வெயிட்டு-(Y) (Mckelveyite-(Y)) என்பது Ba3Na(Ca,U)Y(CO3)6•3H2O.[1]என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது நீரேற்றப்பட்ட சோடியம், பேரியம், இட்ரியம் மற்றும் யுரேனியம் கொண்ட கார்பனேட்டு தாதுவாகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மெக்கல்வெயிட்டு-(Y) கனிமத்தை Mkv-Y[3]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

தோற்றம்

[தொகு]

மெக்கல்வெயிட்டு-(Y) முதன்முதலில் 1965 ஆம் ஆண்டு வயோமிங்கின் சுவீட்வாட்டர் மாகாணத்தில் உள்ள கிரீன் ஆறு உருவாக்கத்தில் உள்ள படிவுகளிலிருந்து கண்டுபிடித்து விவரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வின் முன்னாள் இயக்குநரான வின்சென்ட் எல்லிசு மெக்கெல்வியின் (1916–1985) நினைவாகப் பெயரிடப்பட்டது.[4]

வயோமிங்கின் பசுமை நதி உருவாக்கத்தில் திரோனா கனிம அடுக்குகளுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. உருசியாவின் கோலா தீபகற்பத்தில் உள்ள கிபினி திண்மப்பாறைத் தொகுதி என்ற கார ஊடுருவும் இடத்திலிருந்தும் காணப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. இது பசுமை நதி உருவாக்கத்தில் எவால்டைட்டு, அக்மைட்டு, பயோடைட்டு, குவார்ட்சு, இலேபண்ட்சோவைட்டு, சீயர்லசைட்டு மற்றும் உலுகோசுபீனைட்டு ஆகிய கனிமங்களுடன் இணைந்து காணப்படுகிறது.

கிபினி திண்மப் பாறைத் தொகுதியில் எவால்டைட்டு, பெலோவைட்டு-(Ce), புளோரைட்டு, நெனாட்கெவிசைட்டு, அன்சைலைட்டு-(Ce), சின்கைசைட்டு-(Ce), குகாரன்கைட்டு-(Y), பர்பான்கைட்டு, கால்சைட்டு, பாரைட்டு மற்றும் ஆர்த்தோகிளேசு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.

ஆப்கானித்தானின் கனெசின் வளாகத்தில் இது டோலமைட்டு, கால்கின்சைட்டு-(Ce), கார்போசெர்னைட்டு, கனெசைட்டு மற்றும் பாரைட்டு ஆகியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது.[2] கியூபெக்கில் உள்ள செயிண்ட்-இலாயர் மலையிலும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.

கோலா தீபகற்பத்தில் உள்ள ஊரியார்வி கார-சிலிக்கா உள்ளடக்கம் குறைந்த மலைப்பகுதியில் நியோடிமியம் நிறைந்த மெக்கல்வெயிட்-(Nd) என்ற தொடர்புடைய கனிமத்தின் இருப்பு விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கனிமம் பன்னாட்டு கனிமவியல் சங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Mckelveyite-(Y)". webmineral.com. Retrieved 2008-12-13.
  2. Mckelveyite-(Y) on Mindat.org
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  4. Milton, C.; B. Ingram; J.R. Clark; E.J. Dwornik (1965). "Mckelveyite, a new hydrous sodium barium rare-earth uranium carbonate mineral from the Green River Formation, Wyoming.". Am. Mineral. 50: 593–612. http://www.minsocam.org/ammin/AM50/AM50_593.pdf. 
  5. Mindat
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்கல்வெயிட்டு&oldid=4408673" இலிருந்து மீள்விக்கப்பட்டது