மெகர்பானு கனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெகர்பானு கனம்
பிறப்பு1885 (1885)
அஹ்சன் மன்சில், டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய வங்காளதேசம்)
இறப்பு3 அக்டோபர் 1925(1925-10-03) (அகவை 39–40)
தேசியம்பெங்காலி
அறியப்படுவதுஓவியம்

மெகர்பானு கனம் (1885 - 3 அக்டோபர் 1925) இந்தியாவின் வங்காள பிரபுவம்சத்தை சேர்ந்த பிரபல ஓவியக் கலைஞராவர். டாக்காவை ஆட்சி செய்த மூன்றாம் நவாப்பான, நவாப் அஹ்சனுல்லா குவாஜா மற்றும் அவரது மனைவி நவாப் பேகம் கம்ருன்னேசா ஆகியோரின் மகளாவார். [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் டாக்காவில் 1885 ஆம் ஆண்டு டாக்கா நவாப் குடும்பத்தில் உள்ள அஹ்சன் மன்சிலில் கனம் பிறந்துள்ளார். டாக்காவின் அரச குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை, நவாப் குவாஜா அஹ்சனுல்லா மற்றும் இவரின் சகோதரரும் அடுத்த நவாபும் ஆன, நவாப் குவாஜா சலிமுல்லா ஆகியோர் குறிப்பிடத்தக்க அரசர்களாவர். வங்காளத்தில் உள்ள பெரும்பாலான பிரபுக்களைப் போல் இவரும் வீட்டிலேயே தன் படிப்பை பயின்றார். 1902 ம் ஆண்டு குவாஜா முகமது ஆசாமை இவர் மணந்துள்ளார். [3]

கலைத்திறமை[தொகு]

கனம் தனது ஓவியங்களை தி மொஸ்லம் பாரத் என்ற மாத இதழுக்கு பிரசுரிக்க அனுப்பியுள்ளார். அந்த இதழில் இவரது ஓவியங்களைக்கண்ட காசி நஸ்ருல் இஸ்லாம் (பிற்காலத்தில் வங்காளத்தின் தேசியக்கவியாக அறிவிக்கப்பட்டவர்) அந்த ஓவியங்களின்பால் ஈர்க்கப்பட்டு, கேயபரேர் தாரணி என்ற கவிதையை எழுதினார். இந்த ஓவியங்கள் ஜூலை-ஆகஸ்ட் 1920 பதிப்பில் இக்கவிஞரின் கவிதையுடன் அதே மாத இதழில் வெளியிடப்பட்டது. ஒரு வங்காளப் பெண் கலைஞரின் ஓவியம் அச்சிதழில் வெளியிடப்பட்டது அதுவே முதன்முறையாகும். கனம் தனது சகோதரிகள் அக்தர்பானு மற்றும் பரிபானுவுடன் டாக்காவில் கம்ருன்னெஸ்ஸா பெண்கள் உயர்நிலைப் பள்ளியை பெண்களின் கல்விக்காக திறந்து அர்ப்பணித்தார். மேலும் உருது மாத இதழான ஜாது என்பதை பண ரீதியா ஆதரித்துள்ளார்.. [3]

இறப்பு[தொகு]

புகழ்பெற்ற ஓவியரான கனம் அக்டோபர் 3, 1925 அன்று பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கிழக்கு வங்காளத்தின் டாக்காவில் இறந்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The official web site of the Dhaka Nawab Family". nawabbari.com. 25 November 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. (in en) All India Reporter. D.V. Chitaley. 1929. பக். 445. https://books.google.com/books?id=Uls2AAAAIAAJ&q=Meher+banu+Khanam. 
  3. 3.0 3.1 3.2 Hayat, Anupam. "Khanam, Meherbanu". Banglapedia (ஆங்கிலம்). 2 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகர்பானு_கனம்&oldid=3676161" இருந்து மீள்விக்கப்பட்டது