மூஸ் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூஸ் மாகாணம்
Muş ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் மூஸ் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் மூஸ் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமையக்கிழக்கு அனதோலியா
துணைப்பகுதிவான்
அரசு
 • தேர்தல் மாவட்டம்மூஸ்
 • ஆளுநர்ஆல்கர் குண்டாசஸ்
பரப்பளவு
 • மொத்தம்8,196 km2 (3,164 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்4,07,992
 • அடர்த்தி50/km2 (130/sq mi)
தொலைபேசி குறியீடு0436
வாகனப் பதிவு49

மூஸ் மாகாணம் (Muş Province, துருக்கியம்: Muş ili , Kurdish ) என்பது கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இது 8,196 கிமீ 2 பரப்பளவு கொண்டுள்ளது. மேலும் 2010 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி இதன் மக்கள் தொகை 406,886 ஆகும். இது 2000 ஆம் ஆண்டில் 453,654 ஆக இருந்தது. மாகாண தலைநகரம் மூஸ் நகரம் ஆகும். மூஸ் மாகாணத்தில் உள்ள மற்றொரு நகரம், மலாஸ்கர்ட் ( மான்சிகர்ட் ), இது 1071 இல் நிகழ்ந்த மான்சிகர்ட் போருக்காக பிரபலமானது. மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் குர்து மக்களாவர். 2018 அக்டோபரில் ஆல்கர் குண்டாச்சை மாகாண ஆளுநராக ரசிப் தைய்யிப் எர்டோகன் நியமித்தார்.[2]

மாவட்டங்கள்[தொகு]

முஸ் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

 • புலனக்
 • ஹஸ்காய்
 • கோர்கட்
 • மலாஸ்கர்ட்
 • மூஸ்
 • வர்டோ

பொருளாதாரம்[தொகு]

வரலாற்று ரீதியாக, மூஸ் மகாணம் கோதுமை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றது.[3] மாகாணத்தில் மடர் என்னும் தாவரம் வளர்கிறது. இதை உள்ளூர்வாசிகள் சாயத்திற்காகப் பயன்படுத்தினர் .[4] இப்பகுதியில் உப்பு சுரங்கங்களும் இருந்தன . 1920 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, அது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் போதுமான அளவு இருப்பதாகக் கூறப்பட்டது.[5]

குறிப்புகள்[தொகு]

 1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
 2. "Valimiz". www.mus.gov.tr. Archived from the original on 2015-05-26. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
 3. Armenia and Kurdistan. http://www.wdl.org/en/item/11768/view/1/60/. 
 4. Armenia and Kurdistan. http://www.wdl.org/en/item/11768/view/1/62/. 
 5. Armenia and Kurdistan. http://www.wdl.org/en/item/11768/view/1/71/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூஸ்_மாகாணம்&oldid=3628079" இலிருந்து மீள்விக்கப்பட்டது