உள்ளடக்கத்துக்குச் செல்

மூவலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவலூர்
  கிராமம்  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் எச்.எசு. ஸ்ரீகாந்த், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மூவலூர் சிற்றூர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்[3]. இது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள மங்களாம்பிகை உடனுறை மார்க்கசகாயேசுவரர் கோவில் பாடல் பெற்ற தலமாகும். முழுமுதற்கடவுள் மூவரும் வழிபட்ட தலமாகையால் "மூவர் ஊர்" என்பது திரிந்து மூவலூர் எனவாயிற்று என்பாரும் உளர்.

தேவதாசி முறையினை ஒழிக்கப் பாடுபட்ட தமிழ்ப் பெண்ணியவாதி மூவலூர் ராமாமிர்தம் இச்சிற்றூரைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2014-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவலூர்&oldid=4431477" இலிருந்து மீள்விக்கப்பட்டது