மூவர் கோயில், கொடும்பாளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூவர் கோவில்

சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூரில் என்ற ஊரில் அமைந்துள்ளது மூவர் கோயில்.

அமைவிடம்[தொகு]

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலையை அடுத்து, புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும், கொடும்பாளூர் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இவ்வூர் கொடும்பை நகர் என்று அழைக்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

கொடும்பாளூரை ஆண்ட வேளிர் குல அரசனான பூதிவிக்கிரமகேசரி என்பவனால் மூவர் கோயில் கட்டப்பட்டது. பூதிவிக்கிரமகேசரிக்கு மூவர் கோயிலில் நடுக்கோயிலைத் தன் பெயராலும் மற்ற இரு கோயில்களைத் தன் தேவியரான அனுபமா, கற்றளி என்ற இருவரின் பெயராலும் எடுத்ததை நடுக்கோயிலின் சுவரில் காணப்படுகின்ற அம்மன்னனின் கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. இந்த மூன்று கோயில்களில் நடுவில் உள்ள கோயில் மட்டும் சிவலிங்கம் உள்ளது. பேரழகோடு காணப்படும் இருகோயில்களின் விமானங்களிலும் அழகான சிற்பங்கள் காணப்பெறுகின்றன.[1] இக்கோயில் 10 ஆம் நூற்றாண்டை அதாவது சோழர்களில் இரண்டாம் சுந்தர சோழ பராந்தகன் மற்றும் இரண்டாம் ஆதித்த கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது என்று இக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கோயில் அமைப்பு[தொகு]

மண்டபங்கள்[தொகு]

மூன்று கோயில்களிலும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கும் வடக்குமாக கட்டப்பட்டுள்ள இம் மூன்று கோயில்களும் காலபோக்கில் வடக்குப் பக்கம் அமைந்திருந்த கோயில் இடிந்து போனது. மூவர் கோயில் ஒவ்வொன்றிலும் கருவறை, அர்த்த மண்டபம், துவாரபாலகர், நந்திஸ்வரர் என ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கோயில்களுக்கும் பொதுவாக ஒரு மகா மண்டபம் வெகு நேர்த்தியாக அமைந்திருந்தது. மகா மண்டபத்தை அடுத்து நந்தி மண்டபம், பலிபீடம் அமைந்து இருந்ததற்கான சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. பிரகாரச் சுற்றில் பரிவார தேவதைகளுக்காகக் கட்டப்பட்டிருந்த பதினைந்து சந்நிதிகளும் அஸ்திவாரங்கள் மட்டுமே இன்று நம் கண்ணால் காணக் கூடியவை. வடகிழக்கு ஈசான மூலையில் வட்ட வடிவில் நேர்த்தியாக அமைந்த படிக்கிணறு அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றி பெரிய திருமதில் இருந்தற்கான தடயம் மட்டுமே எஞ்சியுள்ளது.

கருவறை, விமானம்[தொகு]

கருவறை 21' X 21' என்ற அளவில் மேற்கு பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. விமானம் 32' உயரம் கொண்டது.கோயில் விமானத்தின் சிறப்பு என்னவெனில் விமானக் கட்டுமானக் கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியே. சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக அமைக்கப்பட்டுள்ள பாரத்தை கொண்டு விமானத்தின் உள்பகுதி கூம்பு போன்ற உள்கூடாக உருவகப்பட்டுள்ளது. இவை தமிழரின் நாகரிக வளர்ச்சியை, கலாச்சார மேன்மையை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் மதிப்புமிக்கவையாகும்.

சிற்பங்கள்[தொகு]

தென்னிந்திய கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் நுட்பமாகக் கொண்டுள்ள இக்கோயிலில் அமைந்துள்ள களரி மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, அர்த்தநாரீசுவரர், கங்காதர மூர்த்தி உள்ளிட்ட சிற்பங்கள் உள்ளன.[2]

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]