மூவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். பெருந்தலைச்சாத்தனார் இவனை நேரில் கண்டு பாடியுள்ளார். பொய்கையார் இவனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

பரிசில் நீட்டித்தான்[தொகு]

மூவன் நெல்வளம் மிக்க ஊரை ஆண்ட அரசன். இவன் போரைப் பெரிதும் விரும்புபவனாம். பழம் தேடிச் சென்ற வௌவால் மரத்தில் பழம் இல்லாமையால் வறிது மீள்வது போல இவனிடம் பரிசில் பெறாமல் இப் புலவர் பெருந்தலைச்சாத்தனார் வறிது மீண்டாராம். அதனால் "நம்முள் குறுநணி காண்குவதாக!" என்று சாபம் இடுகிறார். புறம் 209

மூவன் பல்[தொகு]

மூவன் பல்லைப் பிடுங்கி, தொண்டி அரசன் பொறையன் தன் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான் பொய்கையார் - நற்றிணை 18

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவன்&oldid=2565088" இருந்து மீள்விக்கப்பட்டது