மூவகை மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓர் எழுத்து, தனியாகவோ பல எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்.[1] பதம், மொழி, கிளவி என்பன ஒருபொருள் தரும் பலசொற்கள்.

மூவகை மொழிகள்[தொகு]

மொழி மூவகைப்படும். அவையாவன

  1. தனிமொழி
  2. தொடர்மொழி
  3. பொதுமொழி

தனிமொழி[தொகு]

ஒருசொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி.

எ.கா: வா, கண், செய்தான்

தொடர்மொழி[தொகு]

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.

எ.கா: படம் பார்த்தான்.

பொதுமொழி[தொகு]

ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி எனப்படும்.

எ.கா: அந்தமான், பலகை, வைகை

‘அந்தமான்’ என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த+மான் எனப் பிரிந்து நின்று அந்த மான் (விலங்கு) என வேறு பொருளையும் தருகின்றது.

நன்னூல் நூற்பா[தொகு]

ஒருமொழி ஒருபொருள நவாம் தொடர்மொழி

பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன - நன்னூல், 260

சான்றுகள்[தொகு]

  1. தமிழ்நாடு சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு பாடநூல். பக். 17. 

வெளியிணைப்புகள்[தொகு]

  1. நன்னூல் நூற்பா எண்: 260
  2. விக்கிமூலம் (வெளி இணைப்பு) பவணந்தி முனிவரின் நன்னூல் சொல்லதிகாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவகை_மொழிகள்&oldid=3717140" இலிருந்து மீள்விக்கப்பட்டது