மூழ்கடிக்க முடியாத சாம்
| ஆஸ்கர் | |
|---|---|
ஜார்ஜினா ஷா-பேக்கரின் மூழ்காத சாமின் உருவப்படம். | |
| ஏனைய பெயர்(கள்) | மூழ்கடிக்க முடியாத சாம் ஆஸ்கார் |
| இனம் | வீட்டுப் பூனை |
| வகை | உள்நாட்டு ஷார்ட்ஹேர் |
| பால் | ஆண் |
| பிறப்பு | 1941 இக்கு முன்பு |
| இறப்பு | 1955 பெல்பாஸ்ட், வடக்கு அயர்லாந்து |
| செயற்பட்ட ஆண்டுகள் | 1941–1955 |
| Employer | |
| Notable role | கப்பல் பூனை |
ஆஸ்கர் (இது அன்சிங்கபிள் சாம் (Unsinkable Sam, அதாவது மூழ்கடிக்க முடியாத சாம் என்றும் அறியப்படுகிறது) என்பது ஒரு கப்பல் பூனையாகும். இது இரண்டாம் உலகப் போரின்போது கிரிக்ஸ்மரினா மற்றும் அரச கடற்படை ஆகிய இரண்டிலும் வளர்ப்புப் பூனையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது 1941 இல் மூழ்கிய ஜெர்மன் போர்க்கப்பலான பிஸ்மார்க், பிரித்தானிய நாசகார கப்பலான எச்.எம்.எஸ். கோசாக், பிரித்தானிய விமானம் தாங்கி கப்பலான எச்.எம்.எஸ் ஆர்க் ராயல் ஆகிய மூன்று கப்பல்கள் சிலமாத இடைவெளியில் மூழ்கியபோதும் அவற்றிலிருந்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. 1941 ஆம் ஆண்டு ஆர்க் ராயல் மூழ்கிய பிறகு, ஆஸ்கரின் ஒளிப்படங்கள் உட்பட, இதன் கதையின் சமகால அறிக்கைகள் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், அந்தப் பூனை பிஸ்மார்க் அல்லது கோசாக் கப்பல்களில் இருந்ததாக்க் கூற எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.
சமகால அறிக்கைகள்
[தொகு]1941 நவம்பர் 14 அன்று, விமானம் தாங்கிக் கப்பலான எச்.எம்.எஸ். ஆர்க் ராயல், ஜிப்ரால்டரிலிருந்து சிறிது தொலைவில் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியது. அங்கு அது பெர்பெச்சுவலில் நடவடிகைக்காக மால்ட்டாவிற்கு வானூர்திகளை ஏற்றிச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது. [1] அதே நாளில் அக்கப்பல் மூழ்கியது குறித்து அறிவிக்கப்பட்டது, இரண்டு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 16 அன்று அட்மிரால்டி ஒரு மனிதர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தினார். கப்பலில் இருந்த ஆறு பூனைகளில் "பெரும்பாலானவை" காப்பாற்றப்பட்டதாக செய்தித்தாளில் செய்தி வெளியானது.
நவம்பர் 18 அன்று ஜிப்ரால்டரிலிருந்து வந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியில், ஆர்க் ராயல் மூழ்கிய பிறகு, ஒரு பலகையின் மீது ஒரு கருப்புப் பூனை ஏறி நின்று கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியது; அது "ஆஸ்கர்" என்று அடையாளம் காணப்பட்டது, முன்பு அது பிஸ்மார்க் கப்பலில் செல்லப் பிராணியாக இருந்தது. இப்பூனை நாசகாரக் கப்பலான எச்.எம்.எஸ். ஆல் மீட்கப்பட்டது. அது மூழ்குவதற்கு முன்பு ஒரு கட்டத்தில் ஆர்க் ராயல் கப்பலுக்கு மாற்றப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு யார்கசயர் போஸ்ட் இதழ் உயிர் பிழைத்த மூவருடன் நடத்திய நேர்காணலில், "கப்பலின் இரண்டு பூனைகளும்" காப்பாற்றப்பட்டதாக ஒரு அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டியது, "ஆஸ்கார் முன்னர் பிஸ்மார்க் கப்பல் குழுவினரின் செல்லப்பிராணி". (கப்பலில் இருந்த பூனைகளின் எண்ணிக்கை வெவ்வேறு அறிக்கைகளில் வேறுபட்டிருந்தன. கப்பல் மூழ்கியதை நேரில் பார்த்த டெய்லி எக்ஸ்பிரஸ் இன் பத்திரிகையாளர், பெயரிடப்படாத ஒரு பூனை, "பத்திற்கும் மேப்ட்டவைகளில் ஒன்று", எடுத்துச் செல்லப்பட்டது என்று குறிப்பிட்டார்.)
திசம்பர் தொடக்கத்தில் "ஆஸ்கார்" பத்திரிகைகளில் மீண்டும் இடம்பெற்றது. இது டெர்ரியில் உள்ள மாலுமி ஓய்வு விடுதிக்குக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மேலாளரான என்னிஸ்கோர்த்தியின் மார்கரெட் ஹில்லுக்கு வழங்கப்பட்டதாக வடக்கு ஐரிஷ் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தி அறிக்கைகளில் ஒன்று, இது கோசாக் கப்பல் மூழ்கியபோது கப்பலில் இருந்தது, எனவே இனி அதற்கு கப்பல் வேண்டாம் என்று மாற்றப்பட்டது என்று செய்தியை சுவாரசியப்படுத்தியது. [2] [3] 1942 பிப்ரவரியில், ஹில் அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநரான பால் பூன் என்பவரை மணந்தார். போருக்குப் பிறகு ஆஸ்கரை தன்னுடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். [4] மார்ச் மாதத்தில், டெர்ரியிலிருந்து ஆர்ம்ட் ஃபோர்சஸ் வானொலியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியின் இநு கலந்துகொண்டது, அங்கு "ஆஸ்கார் மில்லியன் கணக்கான நேயர்களுக்கு கேட்கும் விதமாக ஒலி எழுப்பியது". [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "HMS Ark Royal". naval-history.net.
- ↑ "The Bismarck's Cat Now in Londonderry". Londonderry Sentinel. 9 December 1941. https://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0001480/19411209/035/0003.
- ↑ "Four-Footed Ulster Prisoner of War". Belfast Telegraph. 9 December 1941. https://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0002318/19411209/124/0004.
- ↑ "The Bismarck Cat - Eire Lady's Romance". Londonderry Sentinel. 5 February 1942. https://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0001480/19420205/050/0002.
- ↑ "Navy's Most Sunk Cat - Oscar On The Air". Londonderry Sentinel. https://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0001480/19420310/047/0003.