மூளைச்சாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருவர் முழுமையான கோமா நிலை, வலியை உணர முடியாத நிலை, சுவாசக்கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல் இருக்கும் நிலை ஆகியவற்றையே மூளைச்சாவு என்கிறார்கள். மனித மூளையின் செயல்பாட்டின் நிரந்தரமான, மீள முடியாத மற்றும் முழுமையான இழப்பாகும். இதில் உயிரைத் தக்கவைக்கத் தேவையான தன்னிச்சையான செயல்பாட்டை நிறுத்துவதும் அடங்கும்.[1][2][3][4] சில நேரங்களில் மூளை மற்றும் உடல் செயல்பாடுகள் இருக்கும். இது கோமா நிலையிலிருந்து வேறுபட்டது.[5]மேலும் இது லாக்-இன் சிண்ட்ரோம் நிலைமையைப் போன்றது அல்ல. ஒரு வேறுபட்ட நோயறிதல் இந்த மாறுபட்ட நிலைமைகளை மருத்துவ ரீதியாக வேறுபடுத்தி அறியலாம். இந்நிலையில் மனிதன் உயிருடன் இருந்தாலும் அல்லது தன்னியக்க செயல்பாடுகள் கொண்டிருப்பினும், கோமாநிலை மற்றும் வெளிப்படையான மூளை செயல்பாடு இன்றியும் அல்லது பதிலளிக்கும் தன்மை இல்லாமலும் இருக்கும்.

மூளை மரணம் என்பது பல அதிகார வரம்புகளில் சட்டப்பூர்வ மரணத்தின் குறிகாட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது சீரற்றதாகவும், பொதுமக்களால் அடிக்கடி குழப்பமாகவும் வரையறுக்கப்படுகிறது.[6]மற்ற உறுப்புக்கள் செயல்படாதபோது மூளையின் பல்வேறு பாகங்கள் தொடர்ந்து செயல்படக்கூடும். மேலும் "மூளை இறப்பு" என்ற சொல் பல்வேறு சேர்க்கைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பெரிய மருத்துவ அகராதி[7] "மூளை இறப்பு" என்பது "பெருமூளை இறப்பு" என்பதற்கு ஒத்ததாகக் கருதினாலும், அமெரிக்க தேசிய மருத்துவ நூலக மருத்துவப் பொருள் தலைப்புகள் அமைப்பு மூளை இறப்பை உள்ளடக்கியது மூளை மற்றும் தண்டு வடம். இந்த வேறுபாடுகள் மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் இறந்த பெருமூளை மற்றும் உயிருள்ள மூளைத் தண்டு உள்ள ஒருவருக்கு, தன்னிச்சையான சுவாசம் உதவியின்றி தொடரலாம், அதேசமயம் முழு மூளை மரணம் (மூளைத் தண்டு இறப்பும் இதில் அடங்கும்), உயிர் ஆதரவு உபகரணங்கள் மட்டுமே காற்றோட்டத்தை பராமரிக்கும். சில நாடுகளில், மூளைச்சாவு அடைந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்ட நோயாளிகள், உறுப்பு தானம் செய்வதற்காக அவர்களின் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் சட்டப்பூர்வமாக அகற்றலாம்.

மூளையின் கீழ்ப்பகுதி முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மனிதர்கள் மூச்சு விடுவது, இரத்த அழுத்தம், மற்றும் இதயத் துடிப்பு அகியவைகளை மூளை கட்டுப்படுத்தி வருகிறது. இது பழுதடைந்தால் அப்போது அந்த நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.

மூளையில் உள்ள இரத்தத்துக்கு ஆக்சிசன் கிடைக்காததால் அது ஒரே இடத்தில் நிற்பதால் முதுகெலும்புக்கு செல்லும் மூளையின் கீழ்ப்பகுதி பாதிக்கப்படுகிறது. அதை ஒட்டி அந்த மனிதர் இறந்ததாக கூறப்படுகிறார். மூளைச்சாவு என்பதும் சட்டப்படி இறப்புக்கு சமமாகவே கருதப்படுகிறது. இதனால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்வது சட்டபூர்வமாகிறது.

உடல் உறுப்புக்கள் எடுக்கும் வரை அந்த உறுப்புக்களுக்கு மரணம் நேராமல் இருக்க செயற்கை முறையில் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு தரப்படுகிறது. இதனால் அந்த உறுப்புக்கள் எடுக்கப்படும் வரையில் ஆக்சிஜன் ஊட்டப்பட்ட இரத்த ஓட்டம் அந்த உறுப்புக்களுக்கு கிடைக்கிறது. இதனால் இதயம் துடித்தாலும் அந்த மனிதர் இறந்து போனவராகவே கருதப்படுகிறார்.

ஒரு மனிதருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு மட்டுமே தெரிவிக்க முடியும். அவர்கள் அதற்கு முன்பு நோயாளியால் இயந்திர உதவி இன்றி சுவாசிக்க முடிகிறதா, கண் விழிகள் வெளிச்சத்தை உணர்கிறதா, உடலில் வலி போன்ற உணர்வுகள் உள்ளதா போன்றவற்றை இருமுறை பரிசோதிக்க வேண்டும். ஒரு பரிசோதனைக்கும் மற்றொன்றுக்கும் இடையில் 6 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். மூளச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படும் நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுபவராக இருத்தல் வேண்டும்.

உடல் உறுப்புகள் தானம்[தொகு]

மூளைச்சாவு ஏற்பட்ட நிலைகளில் உள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவது கடினம். மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்தினால், உறுப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளவர்கள் மறுவாழ்வு பெறமுடியும். கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல் போன்ற உறுப்புகளையும், கண்கள், இதய வால்வுகள், தோல், எலும்பு போன்றவற்றின் திசுக்களையும் தானம் செய்யலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Brain death". Encyclopedia of Death and Dying. 
  2. Young, G Bryan. "Diagnosis of brain death". UpToDate. பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
  3. Goila, A.; Pawar, M. (2009). "The diagnosis of brain death". Indian Journal of Critical Care Medicine 13 (1): 7–11. doi:10.4103/0972-5229.53108. பப்மெட்:19881172. 
  4. Machado, C. (2010). "Diagnosis of brain death". Neurology International 2 (1): 2. doi:10.4081/ni.2010.e2. பப்மெட்:21577338. 
  5. Multi-Society Task Force on PVS (May 1994). "Medical aspects of the persistent vegetative state (1)". N. Engl. J. Med. 330 (21): 1499–508. doi:10.1056/NEJM199405263302107. பப்மெட்:7818633. 
  6. "Investigation of Public Perception of Brain Death Using the Internet". Chest 154 (2): 286–292. August 2018. doi:10.1016/j.chest.2018.01.021. பப்மெட்:29382473. 
  7. Elsevier, Dorland's Illustrated Medical Dictionary, Elsevier, archived from the original on 2014-01-11, பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளைச்சாவு&oldid=3530828" இலிருந்து மீள்விக்கப்பட்டது