உள்ளடக்கத்துக்குச் செல்

மூலிகைப் பூச்சி விரட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழவுத் தொழிலில் பயிர்களை அழிக்கும் ஒரு சில பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் சில இயற்கை பூச்சி விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இயற்கைப் பூச்சி விரட்டிகள் அல்லது மூலிகைப் பூச்சி விரட்டிகள் எனப்படுகிறது.

வகைகள்

[தொகு]

இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் வகைகள் கீழே தரப்பட்டுள்ளது:

  • தசகவ்யா
  • பீஜாமிர்தம்
  • ஜீவாமிர்தம்
  • அக்னி அஸ்திரம்
  • பிரம்மாஸ்திரம்
  • மண்பானை செடித்தைலம்
  • அரப்பு மோர் கரைசல்
  • வேம்பு புங்கன் கரைசல்
  • நீம் அஸ்திரா
  • சுக்கு அஸ்திரா
  • சோற்றுக்கற்றாழை பூச்சிவிரட்டி
  • வேப்பங்கொட்டை பூச்சிவிரட்டி
  • மஞ்சள் கரைசல்
  • இஞ்சி கரைசல்
  • இஞ்சி,பூண்டு,மிளகாய் கரைசல்
  • துளசி இலை கரைசல்
  • பப்பாளி இலை கரைசல்
  • வசம்பு– பூச்சிவிரட்டி
  • பொன்னீம் பூச்சிவிரட்டி
  • ஒட்டு திரவம்
  • விளக்குப் பொறி
  • இனக்கவர்ச்சி பொறி
  • ஒட்டும் பொறி

மூலிகைப் பூச்சிவிரட்டி

நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி. ஆடாதொடா, வேம்பு போன்ற இலை தழைகளை 5 கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு 10 லிட்டா; மாட்டுச் சிறுநீர் கலந்து ஏழு நாள்களுக்கு ஊற வைத்தால் பூச்சிவிரட்டி தயார்.  

அதன் பிறகு வடி கட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம்.   மாட்டுச் சிறுநீர் கிடைக்காவிட்டால் தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம்.  10 லிட்டா; நீருடன், ஒரு லிட்டர் புச்சி விரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.  

ஏழு நாள்களுக்கு மேல் ஊற வைத்தால் பயிர் வளர்ச்சி ஊக்கியாக இது மாறிவிடும்.  அதை வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.