உள்ளடக்கத்துக்குச் செல்

மூலிகைக் குடிநீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநீர்.

தயாரிக்கும் முறை

[தொகு]
  1. ஒரு பாத்திரத்தில் தேக்கரண்டி மூலிகை பொடியை நான்கு லிட்டர் சுத்தமான நீருடன் கலந்து கொதிக்க வைக்கவும்.
  2. கொதி நிலையை அடைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மூடியால் மூடி ஆற விடவும்.
  3. தேவைப்பட்ட நேரத்தில் இளஞ்சூடாகப் பருகவும்.

இது போல பொடி கிடைக்காவிட்டால் நீங்களே கீழ்க்கண்டவற்றை தயாரிக்கலாம்: ஒரு தேக்கரண்டி:

  1. சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்தால் சீராகக் குடிநீர் கிடைக்கும்.
  2. சீரகம், தனியா விதைகள் சேர்த்துக் கொதிக்க வைத்தால் தனியா சீராகக் குடிநீர் கிடைக்கும்.
  3. உலர்ந்த துளசி இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் துளசி குடிநீர் கிடைக்கும்.
  4. உலர்ந்த வல்லாரை இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் வல்லாரை குடிநீர் கிடைக்கும்.
  5. மாம்பட்டை, நெல்லிப்பட்டை, கரிஞ்ஞாலி வேர் இவற்றை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டால் மூலிகைக் குடிநீர் கிடைக்கும்

பலன்கள்

[தொகு]

மூலிகைக் குடிநீரால் கிடைப்பதாகச் சொல்லப்படும் பலன்கள்:

  1. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இளஞ்சூடான சீரகக் குடிநீர் குடிப்பது இரத்த ஓட்டம் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரி செய்து வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சமன் படுத்தும் என்று சொல்கிறது.
  2. இளஞ்சூடான சீரகக் குடிநீர் உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
  3. இதன் நோய் எதிர்ப்பு சக்தி காய்ச்சல், சளி, தும்மல் போன்ற உபாதைகளை அண்டவிடாமல் தடுக்கிறது.
  4. தொண்டைக்கு இதமளிக்கிறது.
  5. வயிற்றுப் பொருமல், உப்புசம்]], வாந்தி, பேதி, காலையில் தோன்றும் பித்தம், தலை சுற்றல் ஆகிய எல்லா துன்பங்களுக்கும் சிறந்த பானம்.
  6. தூக்கமின்மை தீர்த்தல்
  7. உடம்பின் செரிமான சக்தியை தூண்டும் விதமாக உடல் வெப்பத்தையும் சீராக்கும்.
  8. இதில் உள்ள வைட்டமின் 'இ' உயிர் சத்தும், பிற இன்றியமையாத எண்ணெய் சத்துக்களும், நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சை காளான்களைக் கூட மட்டுப்படுத்துகிறது.
  9. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது பால் சுரப்பை சமன்படுத்தும்

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. ஆரோக்கியம் தரும் குடிநீர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலிகைக்_குடிநீர்&oldid=2745221" இலிருந்து மீள்விக்கப்பட்டது