மூலப்பாளையம்

ஆள்கூறுகள்: 11°27′08″N 77°40′21″E / 11.452100°N 77.672600°E / 11.452100; 77.672600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலப்பாளையம்
Moolapalayam

மூலப்பாளையம்
புறநகர்ப் பகுதி
மூலப்பாளையம் Moolapalayam is located in தமிழ் நாடு
மூலப்பாளையம் Moolapalayam
மூலப்பாளையம்
Moolapalayam
மூலப்பாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°27′08″N 77°40′21″E / 11.452100°N 77.672600°E / 11.452100; 77.672600
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்194 m (636 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638 002
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
வாகனப் பதிவுTN-56 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, சோலார், கொல்லம்பாளையம், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் அவல்பூந்துறை
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்காலியிடம்
இணையதளம்https://erode.nic.in

மூலப்பாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 194 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூலப்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°27′08″N 77°40′21″E / 11.452100°N 77.672600°E / 11.452100; 77.672600 (அதாவது, 11°27'07.6"N,) ஆகும். ஈரோடு, சோலார், கொல்லம்பாளையம், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் அவல்பூந்துறை ஆகியவை மூலப்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். மூலப்பாளையம் பகுதியில் நெரிசல் மிகுந்த மூன்று சாலை சந்திப்பு ஒன்று உள்ளது. இச்சந்திப்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சாலை சமிக்ஞை விளக்குகள் சரிவர வேலை செய்யாததால், புதியன நிறுவ மக்கள் எதிர்பார்க்கின்றனர்.[2]

மூலப்பாளையம் பகுதியிலுள்ள பட்டத்தரசியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]

மூலப்பாளையம் பகுதியானது, ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா. காலமாகி விட்டதால், இத்தொகுதிக்கு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Man̲n̲ārman̲n̲an̲ (1993) (in ta). Pāvēntar paṭaippup pāṅku. Pūṅkoṭi Veḷiyīṭu. https://books.google.co.in/books?id=e_IxAAAAMAAJ&q=%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwjhkbyV0_78AhUyIbcAHeLTAT8Q6AF6BAgFEAM. 
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "Arulmigu Pattatharasiamman Temple, Moolapalayam - 638104, Erode District [TM012092].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலப்பாளையம்&oldid=3651788" இலிருந்து மீள்விக்கப்பட்டது