மூலக் குறியீடு (கணிதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிதத்தில் மூலக் குறி, மூலக் குறியீடு, அடிமூலம் அல்லது முருடு (radical sign, radical symbol, root symbol, radix, அல்லது surd) என்பது ஒரு எண்ணின் வர்க்கமூலம் அல்லது உயர்வரிசை படிமூலங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கணிதக் குறியீடு ஆகும்.

இன் வர்க்கமூலம் =
இன் Nஆம் படி மூலம் =

மொழியியலில் இக்குறியீடு வேர்ச் சொல்லுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

முதன்மை வர்க்க மூலம்[தொகு]

ஒவ்வொரு நேர்ம மெய்யெண்ணிற்கும் இரு வர்க்க மூலங்கள் உண்டு. இரண்டும் எண்ணளவில் சமமானவையாகவும் ஒன்று நேர்மக்குறியுடனும் மற்றது எதிர்மக் குறியுடனும் இருக்கும். நேர்ம வர்க்கமூலம் முதன்மை வர்க்க மூலம் எனப்படும். மூலக்குறியானது ஒரு எண்ணின் முதன்மை வர்க்கமூலத்தையே குறிக்கிறது. ஒரு எதிர்ம மெய்யெண்ணின் இரு வர்க்கமூலங்களும் கற்பனை எண்களாக இருக்கும். இவற்றுள் நேர்ம கற்பனைப்பகுதியுடைய வர்க்கமூலத்தையே மூலக்குறியீடு குறிக்கும்.

வரலாறு[தொகு]

மூலக்குறி √ இன் தோற்றம் பலவிதமாக ஊகிக்கப்படுகிறது. சில ஆதாரங்கள் இக்குறியை முதன்முதலில் அராபியக் கணிதவியலாளர்கள் பயன்படுத்தியதாகக் கருதுகின்றன. அரபு மொழியில் "வேர்" எனப் பொருள்கொண்ட "جذر‎" (jadhir) வார்த்தையின் முதலெழுத்தான "ج‎" (ǧīm) இலிருந்து பெறப்பட்டது என்ற கருத்து உள்ளது.[1] ஆனால் லியோனார்டு ஆய்லர் "வேர்" என்ற பொருள்கொண்ட இலத்தீன் வார்த்தையான "radix" இன் முதலெழுத்து "r" இலிருந்து தோன்றியதாகக் கருதுகிறார்.[2]

1525 ஆம் ஆண்டில் கிறிஸ்தோப் ருடோல்ப்பு என்ற செருமானியக் கணிதவியலாளரால் முதன்முதலாக இக்குறி அச்சேற்றப்பட்டது. தோன்றியது. ஆனால் எண்களின் மீது வரும் கிடைக்கோடின்றி இருந்தது. இப்போது பயன்பாட்டிலுள்ள மூலக்குறியை செருமானியக் குறியுடன் (√ ) தொகுப்புக் கோட்டுப்பகுதியை இணைத்து 1637 இல் ரெனே டேக்கார்ட் பயன்படுத்தினார்.[3]

குறிமுறையாக்கம்[தொகு]

Read Character ஒருங்குறி எக்ஸ்எம்எல் உரலி மீயுரைக் குறியிடு மொழி (others)
Square root U+221A √ or √ %E2%88%9A √
Cube root U+221B ∛ or ∛ %E2%88%9B
Fourth root U+221C ∜ or ∜ %E2%88%9C

மேற்கோள்கள்[தொகு]

  1. "Language Log: Ab surd". 22 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. Leonhard Euler (1755) (in la). Institutiones calculi differentialis. https://archive.org/details/bub_gb_sYE_AAAAcAAJ. 
  3. Cajori, Florian (2012) [1928], A History of Mathematical Notations, I, Dover, p. 208, ISBN 978-0-486-67766-8