மூலக்கொத்தளம்
மூலக்கொத்தளம் Moolakothalam மூலக்கொத்தளம் | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°06′25″N 80°16′26″E / 13.107000°N 80.273800°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 29 m (95 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600021 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள பகுதிகள் | பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | திருமதி. எஸ். அமிர்த ஜோதி, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | தயாநிதி மாறன் |
சட்டமன்ற உறுப்பினர் | பி. கே. சேகர் பாபு |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
மூலக்கொத்தளம் (ஆங்கில மொழி: Moolakothalam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5] 50 வருடங்களுக்கு மேலாக, மீன் கருவாட்டு சந்தை ஒன்று மூலக்கொத்தளம் பகுதியில் இயங்கி வருகிறது.[6]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூலக்கொத்தளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′25″N 80°16′26″E / 13.107000°N 80.273800°E ஆகும். பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு ஆகியவை மூலக்கொத்தளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
மூலக்கொத்தளத்தில் 120 ஆண்டுகள் பழமையான மயானம் உள்ளது.[7] இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த நடராஜன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் இறுதி இளைப்பாறும் இடமான இந்த மயானம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். மேலும், சமூக ஆர்வலரும் சீர்திருத்தவாதியுமான சா. தருமாம்பாளுக்கு இங்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.[8] இந்த மயானத்தின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர்.[9] மூலக்கொத்தளம் மயானத்தின் அருகே, ஆதிதிராவிட மக்களின் நலன் கருதி, பல அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட, தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.[10] இதற்கு ம. தி. மு. க., சி. பி. எம்., வி. சி. க., போன்ற சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இங்குள்ள மயானத்தின் ஒரு பகுதியைக் கையகப்படுத்த, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.[11] அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்படும் 1,044 குடியிருப்புகளின் திட்டச் செலவு சுமார் ரூ.138.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.[12]
மூலக்கொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மூர்த்தி விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.[13]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hedlund, Roger E. (2000) (in en). Quest for Identity: India's Churches of Indigenous Origin: the "Little Tradition" in Indian Christianity. ISPCK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7214-525-5. https://books.google.co.in/books?id=W3sGM-wp1msC&pg=PA199&dq=Moolakothalam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj4i5n604z9AhWTTnwKHf0EBhMQ6AF6BAgFEAM#v=onepage&q=Moolakothalam&f=false.
- ↑ Govardhan, Ram (2011-04-01) (in en). Rough with the Smooth. One Point Six Technology Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81115-61-9. https://books.google.co.in/books?id=Tw8nBgAAQBAJ&pg=PT152&dq=Moolakothalam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj4i5n604z9AhWTTnwKHf0EBhMQ6AF6BAgJEAM#v=onepage&q=Moolakothalam&f=false.
- ↑ Madras (India : Presidency) Forest Dept (1911) (in en). Annual Administration Report. https://books.google.co.in/books?id=cnwmAQAAMAAJ&q=Moolakothalam&dq=Moolakothalam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj4i5n604z9AhWTTnwKHf0EBhMQ6AF6BAgGEAM#Moolakothalam.
- ↑ Gandhirajan, C. K. (2004) (in en). Organized Crime. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7648-481-7. https://books.google.co.in/books?id=ohyhsmWmelAC&pg=PA261&dq=Moolakothalam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj4i5n604z9AhWTTnwKHf0EBhMQ6AF6BAgEEAM#v=onepage&q=Moolakothalam&f=false.
- ↑ Madras (India : State) Forest Department (1910) (in en). Administration Report. Superintendent, Government Press. https://books.google.co.in/books?id=CjY_AQAAMAAJ&q=Moolakothalam&dq=Moolakothalam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj4i5n604z9AhWTTnwKHf0EBhMQ6AF6BAgIEAM#Moolakothalam.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).