மூயெத்திலீன் கிளைக்கால் இருநைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூயெத்திலீன் கிளைக்கால் இருநைட்ரேட்டு
TEGDN.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2'-(ஈத்தேன்-1,2-டையில்பிசு(ஆக்சி))பிசுயீத்தைல் டைநைட்ரேட்டு]
வேறு பெயர்கள்
டி.எ.கி.டை.நை
இனங்காட்டிகள்
111-22-8 Yes check.svgY
ChemSpider 7808
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8099
பண்புகள்
C6H12N2O8
வாய்ப்பாட்டு எடை 240.17 g·mol−1
தோற்றம் வெளிர் மஞ்சள் நீர்மம்
அடர்த்தி 1.33 கிராம்/செ.மீ3
உருகுநிலை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மூயெத்திலீன் கிளைக்கால் இருநைட்ரேட்டு (Triethylene glycol dinitrate) என்பது C6H12N2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரையெத்திலீன் கிளைக்கால் டைநைட்ரேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைப்பார்கள். மூயெத்திலீன் கிளைக்காலுடைய நைட்ரோயேற்ற ஆல்ககால் எசுத்தர் மூயெத்திலீன் கிளைக்கால் இருநைட்ரேட்டு ஆகும். வெடிமருந்துகளிலும் ஏவூர்திகளிலும் ஆற்றல் வாய்ந்த நெகிழியாக்கியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இச்சேர்மத்தின் கட்டமைப்பை O2N-O-CH2CH2-O-CH2CH2-O-CH2CH2-O-NO2 என்ற வேதிவாய்ப்பாட்டால் குறிப்பிடுவார்கள். எண்ணெய்பசையுடன் கூடிய வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்மமாக இது காணப்படுகிறது[1]. கிட்டத்தட்ட நைட்ரோகிளிசரின் போல இருக்கும் இச்சேர்மத்தை முமெத்திலோல்யீத்தேன் முந்நைட்ரேட்டுடன் சேர்த்து பொதுவாகப் பயன்படுத்துவார்கள்.

மூயெத்திலின் கிளைக்கால் இரு நைட்ரேட்டு, ஈரெத்திலீன் கிளைக்கால் இரு நைட்ரேட்டு, முமெத்திலோல்யீத்தேன் முந்நைட்ரேட்டு போன்ற சேர்மங்களை நைட்ரோகிளிசரினுக்கு மாற்றாக ஏவூர்திகளில் பயன்படுத்த பரிசீலித்து வருகிறார்கள்[2].

மேற்கோள்கள்[தொகு]