உள்ளடக்கத்துக்குச் செல்

மூன் சே-இன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன் சே-இன்
பிறப்பு24 சனவரி 1953 (அகவை 71)
ஜிஆஜ்
படித்த இடங்கள்
  • Kyung Hee University
பணிநூல் விற்பனையாளர்
வேலை வழங்குபவர்
  • Republic of Korea Army Special Warfare Command
குழந்தைகள்Moon Joon Yong, Moon Da-hye
விருதுகள்டைம் 100, Global Citizen Awards
கையெழுத்து

மூன் சே-இன் (கொரியம்: 문재인; ஆன்ஞ்சா: 文在寅; பிறப்பு 24 சனவரி 1953) தென் கொரியாவின் பன்னிரண்டாவது அதிபர் ஆவார்[1]. இவர் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் வழக்குரைஞராக இருந்தார்.

முன்னாள் அதிபர் ரோ மூ-இயுனின் தலைமைப் பணியாளராகவும் 2015-16 காலகட்டத்தில் மின்சோ கட்சியின் (மக்களாட்சி கட்சி) சார்பாக எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். 19 வது தேசிய அவையில் உறுப்பினராகவும் இருந்தார். 2012ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பார்க் சயுன்-ஆயிடம் தோற்றுவிட்டார் [2] அப்போது ஐக்கிய மக்களாட்சி கட்சி சார்பில் போட்டியிட்டார், 2013இக்கு பின் இது மக்களாட்சி கட்சி என மாற்றப்பட்டது.

தென்கொரியாவின் இச்யோசே நகரில் பிறந்த இவர், இவரின் தந்தை மூன் யாங்-குயுங்க்கிற்கும் தாய் காங் ஆன்-ஓக்கிற்கும் பிறந்த ஐந்து குழந்தைகளில் மூத்தவர் ஆவார். இவரின் தந்தை தற்போது வடகொரியாவிலுள்ள ஆம்கங் நகரைச் சேர்ந்தவர். இவர் அகதியாக வடகொரியாவிலிருந்து தென் கொரியாவிற்கு வந்தவர். இச்யோசே போர் கைதிகள் முகாமில் வேலை புரிந்தார்[3]. பின்பு இவர் குடும்பம் பூசானுக்கு குடிபெயர்ந்தது. மூன் குயுன்காம் உயர் நிலைப்பள்ளியில் படித்தார் [4] பின்பு குய்கி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.[5] யூசின் அரசமைப்பை எதிர்த்து மாணவர்களைத் திரட்டி போராடியதால் இவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு கட்டாய இராணுவச் சேவை காரணமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டு தென் கொரிய சிறப்புப் படையில் பணிபுரிந்தார். அதில் இருந்தபோது வட கொரியாவுக்கு எதிரான மரம் வெட்டும் நிகழ்வு பணியில் ஈடுபட்டார்.

இராணுவப் பணியிலிருந்து விடுபட்டபின் சட்டபடிப்பில் தேர்ச்சி பெற்று நீதித்துறையின் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் வழக்கறிஞர் ஆவதற்கு இணைந்தார். அங்கு இரண்டாவது மாணவனாகத் தேர்ச்சிப் பெற்ற போதும் நீதிபதி பதவியோ அரசாங்க வழக்கறிஞர் பதவியோ கிடைக்கவில்லை, அதற்கு அவர் மாணவராக இருந்தபோது போராடியது காரணமாகியது.[6] ஆனால் மூன் அரசல்லாத வழக்கறிஞராகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "South Korea Elects Moon Jae-in, Who Backs Talks With North, as President". nytimes. பார்க்கப்பட்ட நாள் மே 11, 2017.
  2. "Who is Moon Jae-in, South Korea's new president?". .theguardian. பார்க்கப்பட்ட நாள் மே 11, 2017.
  3. "Moon Jae-in could become South Korea's next leader. But is he too soft for the job?". .scmp.com. பார்க்கப்பட்ட நாள் மே 11, 2017.
  4. Jung Min-ho (9 May 2017). "Moon Jae-in: Son of war refugees rises to power [PHOTOS"]. Korea Times. https://www.koreatimes.co.kr/www/nation/2017/05/356_229029.html. பார்த்த நாள்: 10 May 2017. 
  5. "문재인 : 네이버 통합검색". search.naver.com (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-28.
  6. "대선주자 인물탐구 민주통합당 문재인". 경남신문. 2012-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்_சே-இன்&oldid=2734705" இலிருந்து மீள்விக்கப்பட்டது