மூன்று நுழைவாயில்கள்

ஆள்கூறுகள்: 23°01′27″N 72°35′05″E / 23.0242°N 72.5846°E / 23.0242; 72.5846
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று நுழைவாயில்கள்
1880இல் மூன்று நுழைவாயில்கள்
Teen Darwaza is located in குசராத்து
Teen Darwaza
Teen Darwaza
Location in Gujarat
மாற்றுப் பெயர்கள்திரான் தர்வாஜா, மூன்று வாயில்கள், டிரிபிள் கேட்வே, திரிப்போலியா கேட்வே
பொதுவான தகவல்கள்
வகைநுழைவாயில்
கட்டிடக்கலை பாணிஇந்திய- இசுலாமியக் கட்டிடக்கலை
முகவரிபத்ரா கோட்டைக்கு அருகில்
நகரம்அகமதாபாத்
நாடுஇந்தியா
ஆள்கூற்று23°01′27″N 72°35′05″E / 23.0242°N 72.5846°E / 23.0242; 72.5846
கட்டுமான ஆரம்பம்அண். 1411
நிறைவுற்றது1415[1]
உரிமையாளர்இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
பதவிகள்தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. எண். N-GJ-5

மூன்று நுழைவாயில்கள் (Teen Darwaza) என்பது இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள பத்ரா கோட்டையின் கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்று நுழைவாயில்கள் ஆகும். இது 1415 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது வரலாற்று மற்றும் புராண நிகழ்வுகளுடன் தொடர்புடையது. அகமதாபாத் மாநகராட்சியின் சின்னத்தில் இந்த வாயில்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாறும் கட்டிடக்கலையும்[தொகு]

இது பத்ரா கோட்டையில் இருந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இது மூன்று வளைவுகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் வெளிப்புற முற்றம் வரை இது செல்கிறது. இது கடந்த காலத்தில் மைதானம் ஷா என்று அழைக்கப்பட்டது. மையத்தில் ஒரு நீரூற்று மற்றும் உயர்த்தப்பட்ட மொட்டை மாடி ஒன்று உள்ளது. மத்தியில் உள்ள சாலைவழி 17 அடி அகலமும், ஒவ்வொரு பக்க வளைவும் 13 அடி அகலமும் உள்ளது. வளைவுகளின் உயரம் இருபத்தைந்து அடியாகும். நுழைவாயிலின் மேற்புறத்தில் மொட்டை மாடி முன்பு கூரை ஒன்று இருந்தது. ஆனால் 1877 ஆம் ஆண்டில் இது பழுதுபார்க்கப்பட்டு இடிக்கப்பட்டது. இங்கே பெரிய நிலப்பிரபுக்கள் அல்லது வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் இருப்பை அமைத்திருந்தனர். இப்போது இப்பகுதி நெரிசலான சந்தையாக இருக்கிறது. [2] [3]

அகமதாபாத் நிறுவப்பட்ட உடனேயே முதலாம் அகமத் ஷா அவர்களால் இது கட்டப்பட்டு 1415 இல் நிறைவடைந்தது. [1]

மராத்தா கல்வெட்டு[தொகு]

குடும்ப பெண் உறுப்பினர்களுக்கு சொத்தின் பரம்பரை பற்றி மூன்று நுழைவாயின் தூணில் செதுக்கப்பட்ட ஒரு மராத்தா கல்வெட்டு

மராட்டிய ஆளுநர் சிம்னாஜி ரகுநாத் 1812 அக்டோபர் 10 அன்று தேதியிடப்பட்டு தேவநாகரி எழுத்தில் ஒரு கல்வெட்டை பொறித்துள்ளார். இதில் தந்தையின் சொத்துக்களில் ஒரு மகளானவர் தனது பங்கை எந்தவித இடையூறும் இல்லாமல் பெறவேண்டும் எனவும், மேலும், இது பகவான் விஸ்வநாத்தின் கட்டளை என்றும், இதை மீறினால், இந்துக்கள் மகாதேவருக்குகு பதிலளிக்க வேண்டும், முஸ்லிம்கள் அல்லாவுக்கு அல்லது ரசூலுக்கு விளக்க வேண்டும் என்று இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆணையிட்டுளார். [4] [5]

புராணக்கதை

பல ஆண்டுகளுக்கு முன்பு, செல்வத்தின் தெய்வமான லட்சுமி, இரவில் நகரத்தை விட்டு வெளியேற பத்ரா கோட்டையின் வாயிலுக்கு வந்தார். காவலாளி குவாஜா சித்திக் கொத்தவால் அவரைத் தடுத்தார். மன்னர் அகமது ஷாவிடமிருந்து அனுமதி பெறும் வரை கோட்டையை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். லட்சுமியை நகரத்திலேயே வைத்திருக்க மன்னனிடம் சென்று தலையை துண்டித்துக் கொண்டார். இதனால் நகரத்தின் செழிப்பு ஏற்பட்டது.

பத்ரா வாயில் அருகே சித்திக் கொத்தவாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கல்லறையும், லட்சுமியைக் குறிக்கும் காளிக்கு ஒரு கோயிலும் உள்ளது. [6] இதன் ஒரு பகுதியில் விளக்கு ஒன்று ஒரு முஸ்லீம் குடும்பத்தால் அர்ப்பணிக்கப்பட்டு அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக எரிகிறது. [7]

புகைப்படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Earthquake Spectra: The Professional Journal of the Earthquake Engineering Research Institute. https://books.google.com/books?id=fSlIAQAAIAAJ. 
  2. Lonely Planet Gujarat: Chapter from India Travel Guide. 1 April 2012. https://books.google.com/books?id=Tad9BAAAQBAJ&pg=PT29. 
  3. Ahmedabad: From Royal city to Megacity. 2 February 2011. https://books.google.com/books?id=ivMAUx6Hdl8C&pg=PT26. 
  4. "MARATHA MAGIC:Abad always saved the girl child!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா Publications. 8 February 2011. p. 34. Archived from the original on 6 July 2009. பார்க்கப்பட்ட நாள் 11 January 2015.
  5. "Girls got property rights in 1800s". 2008-01-20. http://m.timesofindia.com/city/ahmedabad/Girls-got-property-rights-in-1800s/articleshow/2715094.cms. பார்த்த நாள்: 2015-01-11. 
  6. Jadav, Ruturaj (24 February 2011). "Kankaria to showcase city". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 7 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091207235844/http://www.ahmedabadmirror.com/index.aspx?page=article. பார்த்த நாள்: 22 February 2013. 
  7. "Lamp of hope burns bright at historic Teen Darwaza". The Times of India. 3 September 2013. http://m.timesofindia.com/city/ahmedabad/Lamp-of-hope-burns-bright-at-historic-Teen-Darwaza/articleshow/22240853.cms. பார்த்த நாள்: 11 January 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்று_நுழைவாயில்கள்&oldid=3010929" இலிருந்து மீள்விக்கப்பட்டது